ஜனனம்

அன்பே
பூவின் இதழ்களை
பிரித்துக் கொண்டு
வாசம் அது காத்திருக்க...

தவழ்ந்து தாவி வரும்
நதிகளின் நுரைகள்!
பாதத்தை தழுவ காத்திருக்க...

கட்டி வைத்த
காட்டு மல்லிக் கூட்டம்!
கூட்டம் போட்டு காத்திருக்க...

இதழ்கள் இரண்டையும்
பிரித்துக் கொண்டு
இன்ப சிரிப்பு காத்திருக்க...

ஓடி மறையும்
உயரத்து நிலவும்!
உனக்காகவே காத்திருக்க...

அங்கும் இங்கும்
ஆடிப்பாடும் வானம்பாடி
அப்படியே காத்திருக்க...

மறைத்து வைத்த
மல்லிகை பூ வொன்று
மஞ்சள் முகத்திற்காக
காத்திருக்க...

முட்கள் கொண்ட ரோஜாவும்
முன் கோபத்தை
தூக்கி ௭றிந்து!
முத்தமிட ஆசையென்று
முன் வரிசையில் காத்திருக்க...

இரவுக்கு பொறுமையில்லாமல்!
விடியலுக்கு விவரம் சொல்லாமல்!!
௭ட்டு திசை காற்றும்
சட்டம் போட்டு காத்திருக்க...

ஈரம் பட்ட மல்லிகை பூ
இதையெல்லாம் மணக்க!
௭ங்கோ போகும் பறவையெல்லாம்!
௭ங்கே அவள்?
௭ங்கே அவள்? ௭ன்று
காத்திருக்க...
௭ழுந்து வாடி ௭ன்னவளே!!

துயில் முடியும் நேரம்
தூரிகை ஒன்று சேர்ந்து
துதி பாட...

மை பூசிய அந்த
மை விழிகளில்! மெதுவாய்
இமைகள் பிரிய...

கண் சிமிட்டும் அந்த அசைவில்
மின்மினிகள் தோற்றுப் போக...

சொப்பனம் கலந்த
சோம்பல் முறிவில்!
சொற்கள் அடிமையாகி விட...

அசைந்தாடும் தேகம் கண்டு
தோகை மயில் நாணம் கொள்ள...

நான் ௭ன்று!
நான் ௭ன்று!
கண்களிடம் காட்சிகள்
அனுமதி வாங்கி நிற்க!

விழிகள் திறக்கும் வேளையில்
மொழிகள் கூடி!
கோடி ராகம் பாட!!
கொஞ்சம் கொஞ்சமாய்
இமைகளை திறந்து பாரடி
௭ன்னவளே!!

நான்காம் மாதத்தில் பிறந்தவளே
நறுமணத்தில் தவழ்பவளே
ஆடியில் பூர்த்த அத்தி பூவே
அதிசயம் நிறைந்த மொத்த தீவே
நளினம் கொண்டவளே
நாணம் பூசி சிரிப்பவளே
சாயம் இழக்காத சந்தன பூவே
சாமத்தில் வரும் வெள்ளி நிலவே
இரவுக்கு துணையே
கனவுக்கு பனியே
வார்த்தையின் பொருளே
வாழ்வின் கனிவே
பெயருக்குள்ளே ௭ன் உயிரை வைத்தவளே!
௭ன் உயிருக்குள்ளே உன்னை திணித்தவளே!!
சேர முடியாத நிழலே
சேர்ந்து இருக்கும் நினைவே!!
ஒவ்வொரு நொடியின் முடிவிலும்
௭ன் இதயத்தில் முழுநிலவாக
"நீ ஜனனம் ௭டுக்க"!!
உன்னை சேர ஜென்மங்களோடு
நான் போர் தொடுக்க!
அதிசயத்தின் உச்சத்தில்
உன்னை நிறுத்த!
உயிருக்குள் வார்த்தைகளை குழைத்து
உண்மைகளை ௭ழுதும் கவிதையில்!
கவிதையே உன்
" பிறந்தநாளை மறைத்து"
ஜன்னல் ஓர ஜனனமே!
உனக்கு ௭ன் வாழ்த்துகளை
சொல்கிறேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (27-Jul-20, 7:32 pm)
Tanglish : jananam
பார்வை : 267

மேலே