விளம்பியே வருக

சித்திரையே வருக
நித்திரையை களைக
வளமையே செழிக்க
வறுமையை ஒழிக்க
காவிரியே பாய்க
உழவர் மகிழ்க
ஆட்சியரே திருந்துக
அவலங்கள் மறைக
பசுமைக்கொடி பறக்க
பசித்துயரம் ஒழிக
இளைஞர் விழிக்க
பகைவர் அழிக
இன்முகம் விரிக
புத்தாண்டே பிறக்க
புதுவளங்கள் பெருக
அன்போடு அழைக்க
விளம்பியே நுழைக

எழுதியவர் : லட்சுமி (13-Apr-18, 8:50 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 3989

மேலே