இருக்கத்தான் ஆசை
![](https://eluthu.com/images/loading.gif)
உன் அருகில் இருக்கத்தான் ஆசை!
யாரும் இல்லாத பொழுது...
உன் கையால் பூச்சூட ஆசை!
தெரிந்தவர் வராத பொழுது...
நீ கொடுத்த சேலையை உடுத்த ஆசை!
அம்மா அறியாத பொழுது ...
உன் கையோடு கைசேர்த்து நடக்க ஆசை!
பக்கத்தில் யாரும் இல்லாத பொழுது...
ஊரறிய இவையெல்லாம் நடக்க ஆசை!
உன்னவளாய் நான் மணம் சூடும் பொழுது...