விகாரியே வருக

சித்திரை மகளே/
முத்தமிழ் நிலவே/
சில்லெனத் தென்றல்/
மெல்லெனத் தழுவ/
மல்லியின் வாசம்/
முல்லையோடு இணைய/
வெண்ணிறப் பட்டு/
பொன்னிடைத் தொட்டு/
கொஞ்சும் சலங்கொலி/
மிஞ்சிடும் சிரிப்பொலி/
முக்கனிகளைஏந்தி/
சக்கரைப் பொங்கலென/
மகிழ்ச்சிப் பொங்கிடவே/
மங்கலம் பெருகிடவே/
விகாரியே விரைந்தோடி வருக/
நாட்டினில் நல்லறமே பொலிக.

எழுதியவர் : லட்சுமி (13-Apr-19, 9:49 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 1564

மேலே