மகளிர் தினம்

பெண்களுக்கு கொண்டாட ஏது தினம்.
************************************************
கருவிலே தொடங்கும் உரிமைக் குரல்/
காலமுழுதும் போராடும் பீனிக்ஸ் பறவை/
சுவரில் அறையப்பட்ட துருப்பிடித்த ஆணியாய்/
குடும்ப சிலுவையைச் சுமக்கும் சுமைதாங்கியாய்/
உருண்டு விழும் தாயமாய்ப் புரள்கிறாள்/
உரசிப் பார்க்கும் தங்கமாய் உருகுகிறாள்/
மகளாய் மனைவியாய் அன்னையாய் சகோதரியாய்/
மாறி மாறி போடப்படும் முகமூடி/
சுயத்தைத் தொலைத்து முகம்தேடும் தேவதை/
சுயநலம் சிறிதும் இல்லாத இல்லாள்/
முப்பத்துமூன்று சதவிகித ஒதுக்கீட்டைப் புறந்தள்ளி/
சமையலறை கோட்டைக்கு முடிசூடா ராணியாகி/
அடுத்தவர் பசிதீர்க்க அடுக்களையில்
பணியாற்றி/
அலுக்காத உழைப்பில் சலிக்காத பெண்ணரசி/
மூன்றுநாள் இயற்கை தரும் கொடுமை/
மூன்று முடிச்சில் முடங்கிடும் இளமை/
இலட்சியங்கள் தகர்ந்திடும் பிள்ளை வளர்ப்பில் /
இலக்குகள் கனவாக அவள் வாழ்வில்/
இறக்கும்வரை உறவுகளுக்காய் உழைத்து வாழும்/
பெண்களுக்கு கொண்டாட ஏது தினம்.
கி.இலட்சுமி, சென்னை.

எழுதியவர் : கி.இலட்சுமி (7-Mar-21, 8:26 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 10264

மேலே