கொள்ளையடித்தாள்

கொள்ளையடித்தால்
கொள்ளையடித்தால்
கண்ணாலே நெஞ்சத்தை
கொள்ளையடித்தால்...

உறக்கத்தில் ஏதேதோ உலருகிறேன்
ஒரே இடத்திலிருந்து
உலகமெல்லாம் சுற்றுகிறேன்....

உறங்காமலே கனவு காண்கிறேன்
உன்னாமலே உயிர் வாழ்கிறேன்

உன்னை கண்டதிலிருந்து
பகலும் இரவும் எனக்கில்லை
என்னைச் சுற்றி
நடப்பது எதுவும் நினைவில்லை....

மணிக்கணக்கில் தனிமையில்
இருந்தாலும்.... ஏனோ
மனிதர்களோடு இருக்க பிடிக்கவில்லை

காரணமில்லாமல் சிரிக்கிறேன்
காற்றோடு கூட பேசுகிறேன்
இசையைக் கூட வெறுக்கிறேன்
இமைப்பதைக் கூட மறக்கிறேன்

என்னை காதலி என்று
உன்னிடம் சொல்ல மாட்டேன்..!
என்னை காதலிக்க வைக்காமல்
உன்னை விட மாட்டேன்....!

கவிதை ரசிகன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (15-Apr-20, 7:19 pm)
பார்வை : 126

மேலே