காதலிக்கவே நேரமில்லை

காதலிக்கவே நேரமில்லை
============================================ருத்ரா


"முள்ளே
நீ எப்போது
உன்
ரோஜா முகம் காட்டுவாய்?"

ஒரு கொரோனா
இன்னொரு
கொரோனாவுக்கு
எழுதிய காதல் கவிதை இது.

அவ்வளவு தான்.
உலகின் கொரோனா தொற்று
வரை படம்
மட்டம் ஆகி விட்டது.
"ஃப்லேட்டனிங் ஆஃப் தி கர்வ்"

எங்கும் உல்லாசம்
எங்கும் திருவிழாக்கள்.
ஓடாத தேர்கள் ஓடின.
மீண்டும் புத்தாண்டு கேக் வெட்டி
ஆட்டம் கொண்டாட்டம் தான்.

என்ன ஆயிற்றூ?
இப்போது தான்
ஒரு கொரோனா இன்னொரு
கொரானாவை
காதலிக்க தொடங்கியிருக்கிறது.
காதலிக்கவே நேரமில்லை.
இப்போது
உடம்பு செல்களுக்குள் புகுந்து
அந்த மெமரிக்குள் புக‌
எங்கள் மெமரிக்கு ஏது நேரம்?
அந்த வைரஸ்கள்
எங்கோ போய்விட்டனவாம்
வேலன்டைன் கொண்டாட.

கொரோனாக்களுக்கு
காதலை வாசனை காட்டிய‌
அந்த கவிதை வாழ்க!

கொண்டாடட்டும்.
உலகம் எல்லா துன்பங்களையும்
மறந்து கொண்டாடட்டும்.
................
இதுவும் கடந்து போகும்..சரி தான்.
இப்படியும்
கடந்து போகட்டுமே.
இது கற்பனையா?
நம்பிக்கையா?

====================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (15-Apr-20, 7:50 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 148

மேலே