கோவில் யானையின் குறும்பு
*கோவில் யானையின் குறும்பு* என்ற தலைப்பில் *கவிதை ரசிகன் குமரேசன்* எழுதிய கவிதையை முழுவதும் படித்து பாருங்கள் உங்கள் *சிந்தனைக்கு* நிச்சயம் விருந்தாக அமையும்
*கோவில் யானையின் குறும்பு*
நல்லவேளை
என் கோபத்திற்கு
மதம் என்று மட்டும்
பெயர் வைத்தார்கள்..
அப்படியில்லாமல்
இந்து மதம்
கிறிஸ்துவ மதம்
முஸ்லிம் மதம் என்று
வைத்திருந்தால்
என் நிலைமை
என்னாகும்......?
என்னை
வேறு கோவிலுக்கு
மாற்றும் போது
எனக்கு நாமத்தையும்
மாற்றிப் போட்டார்கள்
அது கூட வருத்தமில்லை
என் குடும்ப வாழ்க்கைக்கு
நாமும்
போட்டு விட்டார்களே
அதுதான்
வருத்தமாக இருக்கிறது ....
வலிமை மிக்கது
யானை என்று
வாய் நிறையச்
சொன்னவர்கள்....
கோழைத்தனமாக
என்னை பிச்சை எடுக்க
வைக்கிறார்களே.....
இவர்கள் என்றுதான்
சொல்கின்றபடி
நடப்பார்களோ....?
ஆற்றில் குளிப்பாட்டி
ஆபரணங்கள் பூட்டி
மலர்மாலை சூட்டி
அலங்கரித்துக் கொண்டு
அகம் மகிழ்ந்து போனேன்
அப்புறம்தான் தெரிந்தது
ஆண்டவனைத் தூக்கி
என் தலையில்
வைப்பதற்கு என்று .....
நல்ல வேலை
ஒரு மகராசன்
குடை பிடித்து லந்ததால
கொஞ்சம்
களைப்பு நீங்கியதும்
கால் வலித்தாலும்......!!!
ஆசீர்வாதம்
வாங்க வேண்டிய
பெற்றோர்களை
அனாதை இல்லத்திற்கும்
முதியோர் இல்லம்
தனியார் இல்லத்திற்கும்
அனுப்பி வைத்துவிட்டு
எந்த தகுதியும் இல்லாத
என்னிடம்
ஆசீர்வாதம் வாங்க
வரிசையில் நிற்கின்றனர்....
அதுவும் காசு கொடுத்து
வேறு வழியின்றி
நானும் செய்கிறேன்.....
இல்லை என்றால்
என்னை
அங்குசத்தால்
குத்துவார்கள்......!!!
வாய் உள்ள ஏழைகளுக்கு
உழைத்த உழைப்பிற்கே!
சரியான ஊதியம் தராத
இவர்களா....?
வாயில்லாத ஜீவனான
எனக்கு
தரப்போகிறார்கள்....?
யானை கட்டி
தீனி போட முடியாது என்று
சொன்னவர்கள்
அப்புறம் எப்படி
என்னை கட்டி
தீனி போடுவார்கள்....?
காலை முதல்
மாலை வரை
ஆசீர்வாதம் செய்ய
தும்பிக்கையை ஆட்டியதாலும்...
எறும்பு காதுக்குள்
போகாமலிருக்க
காதை ஆட்டியதாலும்....
கொசுக்களை ஓட்ட
வாலை ஆட்டியதாலும்
உடம்பெல்லாம்
ஒரே வழி ......
யாரிடம் போய்
சொல்லுவேன் ......
இவர்கள் தொல்லை
தாங்க முடியாமல்
தெய்வமே அழும்போது.......!!!
என்னுடைய இனத்திற்கு
இந்த மனிதர்கள்
செய்த பாவத்திற்கு
தண்டனையாகத் தான்
இன்று
காட்டுயானைகள்
ஊருக்குள் புகுந்து
தோப்புகளையும்
தோட்டங்களையும்
அழித்து நாசம் செய்கிறது....
வீடுகளைச் சூறையாடி
மனிதர்களை
மிதித்து கொள்கிறது....
இது
பழிக்குப்பழி அல்ல...
தப்பு செய்தவன்
தண்டனை அனுபவித்தே
ஆக வேண்டும் என்பது இயற்கையின்
நியதி அல்லவா...!!!
*கவிதை ரசிகன்*
*குமரேசன்*
நன்றி!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏