வாழ்க்கை தேர்வின் மதிப்பெண்கள்
ஏப்ரல் மாத வெயிலின் இனிய பாதிப்பு
இயற்கை அன்னை தந்த கரும் பதிப்பு
ஆடுகள் மாடுகள் நிறைந்த சந்தைதான்
ஆயினும் ஏதோ நிகழ்ந்தது விந்தைதான்
பால பருவத்தில் பால் மணம் இல்லை
இளமையில் காதலின் மணம் இல்லை
திட்டம் இல்லாத படிப்பு, இல்லை பிடிப்பு
பிறகு வேலை, எரிய வேண்டுமே அடுப்பு
முதிர்ந்த காளைக்கும் உண்டு பல ஆசை
கல்யாணம் ஆனது, பிறகு பாப்பா ஓசை
எவ்வளவு துன்பங்கள், சில இன்பங்கள்
காலப்போக்கில் பிரிந்தது பல பந்தங்கள்
கடவுள் எங்கே, என தேடுகிறது கண்கள்!
முட்டையே என் தேர்வின் மதிப்பெண்கள்