மலை அருவி
மலை அருவியே..
மலையிடம் பிரியாவிடை பெற..
நீ உதிர்க்கும் நீர்த்துளிகளில்
தலை குளிக்கிறது தாவரங்கள்
தவறாமல்!
மலை அருவியே..
உன் ஆவேச தழுவலுக்காக
ஏங்கும் என் ஆசைகளை..
பயம் எனும் குடை மறைத்து விடுகிறது!
மலை அருவியே..
வேகமாய் இறங்குகிறாய்
மலையின் மூலிகையுடன்..
எட்டாத மூலிகை பயனை
உன்னில் குளித்து
மானிடன் பெருவதற்கே
இலவசமான இயற்கை வைத்தியம்
உன்னிடத்தில்...

