மரியாதை இல்லை

உழைக்கும் மனிதனுக்கு மரியாதை இல்லை.
அதிகாரத்தோடு மிரட்டும் தொனியில் உழைப்பவனை அழைக்கும் சமூகம்,
இரத்தம் சிந்தி உழைக்கும் வர்க்கம்,
இடையில் நின்று லாபம் சம்பாதிக்கும் புரோக்கர் கூட்டம்.
சாதி பேசும், இனம் பேசும், மதம் பேசும், தேசியம் பேசும்,
தேகம் வருத்தி உழைக்கும் தொழிலாளிக்கு இங்கே மரியாதை இல்லை.

ஜல்ட்ரா அடிக்க லாயக்கில்லை என்றால் இந்த சமூகத்தில் முன்னேற்றம் தடுக்கப்படும்.
எப்படியாவது மேலே வரலாம் என்று நீங்கள் உழைத்து கொண்டே இருந்தால் ஈளிச்சவாயனாக கருதப்படுவீர்.
குனிந்து குனிந்து கூன் விழுந்த உழைக்கும் வர்க்கம் நாளும் ஏமாற்றப்படுகிறது.
உழைக்கும் மக்களுக்கு அறிவு எதற்கு என்றிடும் கூட்டம்,
பணம் தான் கல்வியின் தரத்தை தீர்மானிக்கும்,
ஏழைகள் பெற்றிடும் கல்வியோ பெரும் குழப்பத்தையே தரும்.
திறமை இருந்தும் உழைக்கும் வர்க்கம் திட்டமிட்டே ஒதுக்கப்படும் போது மரியாதை இல்லை.

ரோசம், மானம், சூடு சுரணை எல்லாம் விட்டு பொறுமையோடு உழைக்கும் வர்க்கம் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தே ஏமாந்து கொண்டிருப்பதால் தான் இங்கு பணத்தில் கூத்தாடும் வர்க்கம் அதிகமாகிவிட்டது.
ஆயுதங்களுக்கு செலவளிக்கும் பணமோ கோடானு கோடி.
தலைவர்கள் பெயரில் இருப்பவர் எல்லாம் உலக மகா கேடி.
உண்மையாக உழைப்பவர்களுக்கு இங்கே மரியாதை இல்லை.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Sep-22, 1:29 am)
Tanglish : mariyaathai illai
பார்வை : 1367

மேலே