சந்தேகம்

மனிதனே
"சந்தேகம்" என்பது
ஒரு மெல்லிய கோடு
கண்ணுக்கு தெரியாது
ஆனால்....அந்த கோடு
உள்ளத்தை கிழித்து
காயத்தை உண்டாக்கும்...!!

இந்த "சந்தேக கோடு"
காதல் கொண்ட
உள்ளத்திலும்
நண்பர்களின்
நட்பு வட்டத்திலும்
நுழைவதற்கு
அனுமதித்து விட்டால்

உந்தன் மனதின்
சந்தோஷம் தொலைந்து
துயரத்தின் வாசல்
திறந்து கொள்ளும்
அது மெல்ல மெல்ல
கரையானை போல்
உன் உள்ளதை அரித்து
புனிதமான காதலையும்
நட்பையும் அழித்துவிடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Sep-22, 6:12 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : santhegam
பார்வை : 220

மேலே