திருமுகம் கற்பூர தீபம்

தேங்காய்... பழங்கள்...
வெற்றிலை பாக்கு...
தோப்புகள்.. தோட்டங்கள்
வளர்ந்து.. கணேசா உனக்கு
படைத்து தோப்புக்கரணங்கள்
போட்டதில் தைரியம் தெளிவு
உள்ளத்தில் வந்து சேர்ந்தது..

ஆவணி.. வளர்பிறை சதுர்த்தி
அருகம்புல் மாலைகள்
முல்லை.. மல்லி..
பிச்சி பூச்சரங்கள் இன்னும்
பூக்கள் பல சேர்ந்த
வண்ணப் பூ மாலைகள்...

சந்தனம்.. குங்குமம்.. பன்னீர்..
பத்திகள் வாசனை கமழும்
சூழலில் உன் திருமுகம்
காட்டி ஒளிர்ந்த
கற்பூர தீபம் தொட்டு
விநாயகா உன்னை
வணங்குகையில் சிந்தைக்குள்
ஒளி ஒன்று தோன்றுகிறது...

அந்த பூலோக சொர்க்க
சுகத்தில் மகிழ்ந்திருக்கும்
சுகந்த தருணங்களில்
அனைவருக்கும் ஆனைமுகன்
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.
வளங்கள் பெருகட்டும்...
மனங்கள் மகிழட்டும்...

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.

🙏🌹🪷💐🌷🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (31-Aug-22, 11:49 pm)
பார்வை : 19

மேலே