எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கட்டியவன் கட்டில் வரை தான் வேலை என்று கருக்...

கட்டியவன் கட்டில்
வரை தான் வேலை
என்று கருக் கொள்ளச்
செய்து காணாது போக
வீணானது வாழ்க்கை
தன்னுயிரை விட்டுவிட 
எண்ணியவள் சிசுவாய்
அவள் சுவாசம் வங்கி 
வளரும் எனை நினைத்து
மூச்சை நிறுத்திக் கொள்ளாது
தனைத் திருத்தி கொண்டு
எனை புவிக்கு கொண்டு
வந்தாள் அது முதலே அவள் 
அழுகையை சிரிப்புக்கு
பின்னால் சிறை வைத்து
எனை வளர்க்க அறிவை
அமுதாய் தினம் ஊட்டி
வானும் உன் கையெட்டும்
தூரம் தான் தொட்டுவிடு
என்று ஆளுயரம் ஆண்
மகனாக்கினள் அன்று
சொல்லியதை எள்ளவும்
மாறாது நிறைவேற்றுவேன்
என்ற நம்பிக்கையில் இன்று
நானும் அவளும்.......

நாள் : 20-Mar-19, 12:05 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே