எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                         அம்மா

தொப்புள்கொடி உறவுக்கு
உயிர் தந்து
நான் அழுது நீ சிரிக்க!!!
நித்தமும் காத்தாயே அம்மா!!!

நான் பேசிய முதல் மொழிக்கு 
300 முத்தம் கொடுத்தயே அம்மா!!!

ஊர் கண்பட பயந்தாயே!!!
என் கன்னக் குழியில் 
உன் கை பட்டு,
கரு மையில் மறைத்தாயே அம்மா!!!

என் பசியாற்ற ஓடிய கணத்தில் உன் பசியை மறந்தாயே அம்மா!!!

நான் உன்னிடம் வெறுப்பை உமிழ்ந்த துண்டம்மா!!!

சொல் பேச்சை மறுத்ததுண்டம்மா!!!

  காதுபட கோபத்தில் திட்டியதுண்டம்மா!!!

ஆனால், என் கண் கலங்க நீ அழுதாயே!!

அந்தக் கண்ணீர் முன்னாள் 
என் தவறு பிழையானதே அம்மா!!!

நி கண்ட கனவை 
நான் வாழ
பார்க்காமல் சென்றாயே பார்க்க முடியாத இடத்திற்கு!!!!

விதி மீது பழி போட வா!!!

படியேறிச் சென்று வேண்டிய வேலனுக்கு வினா போடவா!!!

என் நிழல் இல்லாமல் வாழச்சொல்லி
மதியை பழக்க சொல்லவா!!!!

நீ கொடுத்த முதல் பரிசுக்கு பதில் பரிசு தரணும் அம்மா!!!

ஊர் முழுக்க சுத்திக்காட்டி, உன் கால் வலிக்க செய்யனும் அம்மா!!!

ஒய்யாரமா நீ ஊஞ்சலாட அதை நான் பார்த்து ரசிக்கணும் அம்மா!!!

ஒரு வாய் சோறு ஊட்ட மறுவாய் நீ மறுக்க, அடம்பிடித்து சாதிக்க ஆசை அம்மா!!!

எல்லாம் கனவாய் போனதே!!!!

மறுபிறவியில் நினைவாக்க உன் நினைவில் நான்!!!!

என் வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியும், இந்தக் கவிதையின் முற்றுப்புள்ளியும் நீ அம்மா!!!!!

மேலும்

அன்னை என்னைச் சுமந்தாே 

பத்து மாதம் முழுக்க ஆனால்
நான் அவளைச் சுமப்பது 
என் வாழ்நாள் முழுக்க

மேலும்

~சொர்கம்~

நான் இறவாமலே பல முறை
சொர்கம் சென்றறேன் 
"அனைவரும் சென்ற இடம்ததான்
அது"
நான் உணர்ந்தேன்
என்ததாய் மடிதான்
எனக்க்கு சொர்கம்.....!
          -குமர.தர்மசீலன்

மேலும்

கட்டியவன் கட்டில்
வரை தான் வேலை
என்று கருக் கொள்ளச்
செய்து காணாது போக
வீணானது வாழ்க்கை
தன்னுயிரை விட்டுவிட 
எண்ணியவள் சிசுவாய்
அவள் சுவாசம் வங்கி 
வளரும் எனை நினைத்து
மூச்சை நிறுத்திக் கொள்ளாது
தனைத் திருத்தி கொண்டு
எனை புவிக்கு கொண்டு
வந்தாள் அது முதலே அவள் 
அழுகையை சிரிப்புக்கு
பின்னால் சிறை வைத்து
எனை வளர்க்க அறிவை
அமுதாய் தினம் ஊட்டி
வானும் உன் கையெட்டும்
தூரம் தான் தொட்டுவிடு
என்று ஆளுயரம் ஆண்
மகனாக்கினள் அன்று
சொல்லியதை எள்ளவும்
மாறாது நிறைவேற்றுவேன்
என்ற நம்பிக்கையில் இன்று
நானும் அவளும்.......

மேலும்

அம்மா 
கருவினில் என்னை சுமந்து
கண்ணுக்குள் வைத்து காத்து 
கண்டதும்  தூக்கி கொஞ்சி 
காணாமல் வருந்தி
நான் நல்லுணவை சுவைக்க 
தன்னுடலை வருத்தி உணவளித்தாள்
என் அன்புத் தாய் ........

மேலும்

முதல் காதல்

என் மனதில் தோன்றிய

   முதல் உணர்வு

என் உதடுகள் பேசிய

முதல் சொல்

என் இதயத்தில் தோன்றிய

முதல் காதல்

நான்   இருந்த

முதல் அறை

நான் படுத்த

முதல் மடி

நான் வாங்கிய

முதல் முத்தம்

என் இதய தேவதை

என் அம்மா

எத்தனை பிறவி எடுத்தாலும்

நீதான் என் அம்மா

மேலும்

உங்களை தாயாக பெற சென்ற சென்மங்களில் என்ன தவம் செய்தேனோ....

ஒரு பெண் எப்படி பொறுமையாக  இருக்க வேண்டும் என தெரியவைத்தாயே.... 

நான் தவறு செய்த போது என்னை மன்னித்து நல்லதை புரிய வைத்தாயே.... 

தாய் என்பவளின் சிறந்த  குணத்தினை காட்டி என்னை நல்  வழியில் நடத்துகிறாயே....


ஆயிரம் கோபங்கள் ஆயிரம் இன்னல்கள் ஆயிரம் துன்பங்கள் வந்த போதிலும் என் மேல் அதை காட்டாமல் ஒரு பிள்ளை என்று செல்லம் கொடுக்காமல் நல்லது கெட்டதை கூறுகிறயே....

மேலும்

இந்த படத்தை பார்த்ததும் சிறு வயதில் அம்மாவின் புடவையை சுற்றிக்கொண்டு விளையாடியது நினைவிற்கு வருகிறது.

மேலும்

எனக்கும் என் அம்மாவின் ஞாபகம் வந்ததே அம்மா சுப்புலக்ஷிமி புடவை முந்தானையைப் பிடித்துக் கொண்டு அன்று சுற்ற முடிந்தது இன்று தங்கள் படைப்பு படித்து தாய்ப் பாசம் உணர முடிகிறது தாய்மை படைப்புகள் தொடரட்டும் பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 26-Mar-2018 5:22 pmகரு உரு பெற்று  இடுப்பில் எடுப்பாய் சுமந்து  தாய்மை தன்மை உணர்ந்து  குழந்தையின் குதலை சொல் கேட்டு  இன்பம் கொள்பவள்தான் தாய்  தன் தசையிலிருந்து  பிரித்தெடுப்பவளும் இவள்தான்  என்னை தன் தசையாக கருதுபவளும் இவள்தான் .......         இவள் இருந்தால் என்றும் இவளோடு இருப்பேன்  இறந்தால் அன்றே புதையுண்டு போவேன் ...........

மேலும்

மேலும்...

மேலே