எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*அம்மா....* இயற்கையால் படைக்கப்பட்ட அற்புதமான அதிசயமான உயிர் அம்மா......

*அம்மா....*
இயற்கையால் படைக்கப்பட்ட அற்புதமான அதிசயமான உயிர் அம்மா...

மனிதனால் படைக்கப்பட்ட அற்புதமான அதிசயமான வார்த்தை அம்மா...

மூச்சுக்காற்றை கொடுத்து 
தன் மூச்சை பற்றி கவலைக்கொள்ளத தவம் நீ...

நிலத்தில் நீ அமர்ந்து
பிள்ளைக்கு மடியை மெத்தையாக்கும் சுகம் நீ...

உலகம் சுற்றி பார்க்க ஆசையிருந்தும்
தன் பிள்ளையே உலகம் என சுற்றித்திரியும் வரம் நீ...

உன் இமை விட்டு நீங்காமல் இருக்க
இரா பகல் வேறுபாடில்லா 
காலம் நீ...

ஸ்வரங்கள் ஏழும், ராகங்கள் பதினாறும் 
உன் பாட்டுக்கு கண்ணுறங்கும் சங்கீதம் நீ....

மரணம் எதிர்நின்றால் கூட நான் மரணத்தை வென்றவள் என்று மரணத்தையே அஞ்சவிடும் கட்டளை நீ...

நூல் சேலைக்கு சேவை செய்யும் ஆனால் என் சேலை என் பிள்ளைக்கு மட்டுமே சேவை செய்யும் என்ற உணர்வு நீ....

மிதிக்க தெரியாது எனக்கு
உன் மார்பகம் சுரந்த அமிர்தம் என்னில் குருதியாய் இருக்கையில் என்  அனைத்தும் நீ...

ஆயுள் துவக்கம் கொடுத்து
ஆயுள் முடிவுவரை கவனிக்க சொல்லி பொறுப்புகளை துணைவியிடம் தாரைவார்க்கும் குணம் நீ...

எல்லா உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் என்றுமே உயர்வு நீ....

*அன்புடன் அம்மாவின் அடிமை 
                          நாகராஜ்....*

பதிவு : மு நாகராஜ்
நாள் : 9-May-22, 9:27 am

மேலே