அன்பு எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிற்பம் செதுக்கும் உளியேப்போல்,
கவிதைகளை செதுக்கி கொண்டிருந்தவள்!!!

ஏனோ,

உன்னை கண்ட நாள் முதல்,
கவிதையின் மொழிகளை மறந்தவள் போல் தவிக்கின்றேன்!!!!

கவிதையின் மொழிகளை மறந்து விட்டேன் என்று மௌனித்தேன்,

எனோ தெரியவில்லை,

சற்று உன்னை சிந்தித்தால் அந்த மௌனத்தை கூட மறந்து விடுகிறேன்!!!!
             BSandhiya 💚💙

மேலும்

மகள் வெண்பாவுக்கு!


தாய போல இருக்கணும் அன்பா நீ - தோள்
சாய கூட இருக்கணும் நண்பா நீ - என்
விடியலாய் விரிந்திடும் வெண்பனி -என்
துடிப்பிலும் துதித்திடும் வெண்பா நீ
- என் வெண்பா நீ💕
அப்பா

மேலும்

முதல் காதல்

என் மனதில் தோன்றிய

   முதல் உணர்வு

என் உதடுகள் பேசிய

முதல் சொல்

என் இதயத்தில் தோன்றிய

முதல் காதல்

நான்   இருந்த

முதல் அறை

நான் படுத்த

முதல் மடி

நான் வாங்கிய

முதல் முத்தம்

என் இதய தேவதை

என் அம்மா

எத்தனை பிறவி எடுத்தாலும்

நீதான் என் அம்மா

மேலும்

                               வரம் வேண்டுகிறேன் … !
திருட்டு பால்விழி  நொடியில்
அன்னப்பறவை  ஆவேனோ ?
நெருப்பு கோபவிழி நொடியில்
பீனீக்ஸ்பறவை ஆவேனோ ?
நெற்றி வியர்வை நொடியில்
தென்றலென  ஆவேனோ  ?
பெட்டிக்குள் உறங்கிடும் நொடியில்
புதைகுழியென   ஆவேனோ ?

மேலும்

மூச்சு விட்டு சுவாசிக்கையில் சற்று இடையிலையும் உன்னை நான் மறவேனா......???

  நெற்றியில் ஒற்றை பொட்டு இடுகையிலும்.....!!!!


உன் முகம் பிரதிபலிக்கையில் நான் தான் உன்னை மறந்திடுவானா...???

கண்ணில் நீர் ததும்பகையில் ஏனோ தாயை தேடும் பிள்ளை போல் ....

உன் விரல் தேடும் குழந்தையாக மனசு   ஏங்குது.....!!!!


கண்ணீர் துடைக்க காரணம் தான் கேட்பயோ....!!!


உரிமை உள்ள இடத்தில்
எதிர்பார்ப்பது என் குற்றமா....???


இதழோரம் உன் சிரிப்பினைக் காண
என்ன தவம் நான் செய்வானோ....???


என்னை நீ புரிந்துக் கொள்ள
எத்தனை ஆலய தரிசனத்தை நான்  மேற்க்கொள்ள....???"பதிலாக "         நான் இருக்கையில் வினாவினை உன்னில் விதைக்கிறேன்.....!!!!  

மேலும்

          வேண்டும் எனக்கு நீ

உன் கை கோர்த்து நான் சென்ற இடங்கள் 
அழகான அந்த நந்தவன நாட்கள்
கடற்கரையில் பதித்த கால்தடங்கள்
நம்மைப்பார்த்து சிரித்த முத்துக்கள்
பசுமையாக இருந்த மரங்கள்
நாம் பேசிய பல கதைகள்-அங்கு
உனக்கும் எனக்கும் நடந்த நாடகங்கள்
நாம் இருவரும் பிரிந்த சில காரணங்கள்
மரங்களும் சிந்துகிறது கண்ணீர் பூக்கள்
மீண்டும் எனக்கு வேண்டும்
உன் அன்பின் முத்தங்கள்

மேலும்

Love 24-Jul-2018 8:24 pm

     அகத்தின் அழகு

  ஆனந்தத்தின் அருவி
 இதயத்தின் இன்னிசை
  ஈகையின் ஈர்ப்பு
உள்ளத்தின் உறைவிடம்
ஊக்கத்தின் உயிர்நாடி
எதிர்பார்ப்பின் ஏடு
பக்கத்தின் தாக்கம்
ஐஸ்வர்யத்தின் ஆரம்பம்
ஒற்றை சொல் ஓவியம்
ஓராயிரம் யுகம் சென்றாலும்
சொல்லும்
ஔவை தமிழ் கடவுளின் நெல்லிக்கனி அன்பு
அம்மாவின் அன்பு அணைத்து காக்கும்
அப்பாவின் அன்பு கண்டித்து திருத்தும்
அன்பு எனும் ஆணிவேர் இல்லாமல்
அறம் எனும் ஆலமரம் உண்டோ?

மேலும்

விலகியதை 

மறக்க 
முடியாததால் 
வருவதையும் 
ஏற்க
இயலவில்லை ..........

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பை தேர்வானதற்கு பாராட்டுக்கள் . தமிழ் அன்னை ஆசிகள் 18-Jul-2018 7:14 pm
உண்மைதான் தோழரே 11-Jul-2018 2:00 pm
ஏனெனில் ஆழ் மனதில் பதிந்த யாவும் எளிதில் அழிந்தும் விடாது, அப்படிப்பட்ட மனம் புதிய எதையும் ஏற்கவும் செய்யாது. 10-Jul-2018 3:54 pm

மற்றவர் அன்புக்கு 

அடி பணியுங்கள் 
ஆனால் ஒரு போதும் 
அடிமை ஆகி விடாதீர்கள் 
பின்பு அது தரும் வலி ஆனது 
மரணத்திலும் கொடுமையானது  ......

மேலும்

அன்பில் யாரும் அடிமையாக முடியா து 19-Jun-2018 12:54 pm
உண்மையை தானே சொல்கிறேன் தோழரே 19-Jun-2018 12:02 pm
ஏன் இப்படி 18-Jun-2018 11:49 pm

 

சிலருக்கு காட்டத் தெரியவில்லை

சிலருக்கு காட்டுவது புரிவதில்லை

சிலருக்கு காட்டியும் உபயோகம் இல்லை

மேலும்

மேலும்...

மேலே