லக்க்ஷியா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : லக்க்ஷியா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 1345 |
புள்ளி | : 302 |
"கூந்தல் கருமேகங்கள்
காற்றினில் பறக்க,
கண்ட விழிகளில்
ஆசை மின்னல்கள் தெறிக்க,
தாக்கிய காதல் இடியது
இதயத்தை பிளக்க,
இனி என்ன?
உன் காட்டில்
அடை மழைத்தான்!".
"இஷ்டப்பட்டு
செய்யும் எதுவும்,
கஷ்டமாக
தெரிவதில்லை,
கஷ்டப்பட்டு
செய்யும் எதுவும்
இஷ்டப்பட்டபடி
முடிவதில்லை."
"நேற்று என்பது நினைவு,
நாளை என்பது கனவு,
இன்று மட்டுமே உனது."
"பள்ளிக்கு சென்றிடுங்கள்
ஏனெனில் பள்ளி
அறிவினை மலரச் செய்யும்.
"பாடங்கள் படித்திடுங்கள்
ஏனெனில் பாடம்
வாழ்வினில் உயர செய்யும்.
1. கல்வி கண் திறந்தால்
நல்வழி பிறக்கும்,
பயணமும் சுகமாகும்,
ஆகையினாலே
கவனமாய் படித்திடுங்கள்.
(பள்ளிக்கு சென்றிடுங்கள்)
2. செல்வத்துள் எல்லாம்
சிறந்தது எதுவோ
கல்வி செல்வம்தானே,
ஆகையினாலே ஆர்வமாய்
படித்திடுங்கள்.
(பள்ளிக்கு சென்றிடுங்கள்)
"உயிரை தருபவள் தாய் என்றால்,
உலகை காட்டுபவர் தந்தை!
நிலத்தில் தவழ வைப்பவள்
தாய் என்றால்,
அதில் நற்பாதையைக் காட்டி
நடக்க வைப்பவர் தந்தை ,
வானத்தை பார்க்க வைப்பவள்
தாய் என்றால்,
அதில் பறக்க கற்றுக் கொடுப்பவர்
தந்தை,
உணவை ஊட்டி வளர்ப்பவள் தாய்
என்றால்,
அதை தேடும் வழியை கற்றுக் கொடுப்பவர் தந்தை,
சோதனையில் உடன் இருப்பவள்
தாய் என்றால்,
அதை சாதனையாக்க கற்று
கொடுப்பவர் தந்தை,
தாய் என்பவள் தெய்வம் என்றால்,
தந்தை என்பவர் அவள் உறையும் கோயிலாகும்,
இரண்டையும் ஜொலிக்க
வைப்பது நல்ல பிள்ளைகள்
எனும் தீபமாகும்".
"காதல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை,
உண்மை...
ஆனால் காதல் மட்டுமே
வாழ்க்கை இல்லை,
இதுவும் உண்மை..."
"வானம் வசப்படும்..
நாம் சிறகுகளை
வளர்த்து கொண்டால்."
"எல்லா பாதையும்
அடைத்து விட்டாலும்
ஒரு அடி எடுத்து
வைத்தால்,
புதுப்பாதை
உருவாகிவிடும்."
" அன்றைக்கு எனக்கு "காய்ச்சல்'. மருத்துவமனைக்கு என்னை என் கணவர் அழைத்துச் சென்றார். Clinic வாசலில் நானும், அவரும் அமர்ந்து இருந்தோம். உடம்பு ஒரே தள்ளாட்டமாக இருந்தது, தலையை குனிந்து அமர்ந்திருந்தேன்.
அப்போது "என்னங்க? எப்படி இருக்கீங்க, உடம்புக்கு என்ன? என்று குரல் கேட்டது. என்னுடைய பழைய தோழி. பல வருடங்களாக
தொடர்பு விட்டு போய் விட்ட நிலையில், எனக்கு எதிரில் !
ஆச்சரியமாக இருந்தாலும் அவர்களுடன் பேச முடியவில்லை 'ஜுரம்' என்று முனகினேன். "அப்படியா, உடம்பை பார்த்துக்கோங்க" என்று அவர்
கூறி விட்டு அமைதியானார்.
டாக்டர் அழைத்ததும் உள்ளே சென்றேன், செக்கப் முடிந்து வெளியே வந்தவுடன் சிற
" செய்திடுவோம் ஒரு விரல் புரட்சி!
தேவையில்லை அதற்கென தனி ஒரு பயிற்சி!
நடந்தது, நடப்பதை நினைத்து பார்க்க ஒரு சிறு முயற்சி,
செய்து விட்டால் போதுமே
நடந்திடும் புது எழுச்சி !
வாக்காளர்களே! உங்களது மலர்ச்சி,
அதில் தான் உள்ளது வெற்றியின் சுழற்சி !
வாக்குகளால் நீங்கள் செய்ய போகும் அந்த புரட்சி!
தந்திடும் நாளைக்கு அதிவேக வளர்ச்சி !
எனவே,
சிறிதும் அடையாதீர் அயர்ச்சி ,
உங்கள் விரல்களே தோற்றுவிக்கும்
புது சமுதாய மறுமலர்ச்சி!
ஆகவே, 'கவனம்'!
வாக்குகள் மாற வேண்டாம் 'நோட்டாக'
ஆகட்டுமே அவையே தீமைக்கு 'வேட்டாக'.
ஆற்றிடுவோம் வாக்களித்து
நம் ஜனநாயக கடமை!
போற்றிடுவோம் வா