இப்படியும் ஒருவர்

" அன்றைக்கு எனக்கு "காய்ச்சல்'. மருத்துவமனைக்கு என்னை என் கணவர் அழைத்துச் சென்றார். Clinic வாசலில் நானும், அவரும் அமர்ந்து இருந்தோம். உடம்பு ஒரே தள்ளாட்டமாக இருந்தது, தலையை குனிந்து அமர்ந்திருந்தேன்.

அப்போது "என்னங்க? எப்படி இருக்கீங்க, உடம்புக்கு என்ன? என்று குரல் கேட்டது. என்னுடைய பழைய தோழி. பல வருடங்களாக
தொடர்பு விட்டு போய் விட்ட நிலையில், எனக்கு எதிரில் !

ஆச்சரியமாக இருந்தாலும் அவர்களுடன் பேச முடியவில்லை 'ஜுரம்' என்று முனகினேன். "அப்படியா, உடம்பை பார்த்துக்கோங்க" என்று அவர்
கூறி விட்டு அமைதியானார்.

டாக்டர் அழைத்ததும் உள்ளே சென்றேன், செக்கப் முடிந்து வெளியே வந்தவுடன் சிறிது மயக்கமாக இருந்தது, கால்களில் செருப்பு கூட போட முடியாமல் தடுமாறினேன்.

அப்போதுதான் என் தோழி யாரும் எதிர்பாராத விதமாக சட்டென்று எழுந்து ஓடி வந்து, என் செருப்பை தன் கைகளில் தூக்கி என்னுடைய கால்களுக்கு அருகில் வைத்ததோடு, என் கையையும் பற்றிக்கொண்டார்.

நானும் என் கணவரும் பதறி போய் விட்டோம் 'நீங்கள் ஏன்?"என்று கேட்டோம். ' பரவாயில்லை'
என்று அவர் சொன்னார்.

பல வருடங்களுக்கு பிறகு பார்த்த தோழியுடன் சரியாக பேச முடியாவிட்டாலும், சூழ்நிலையை புரிந்து கொண்டு எனக்கு உதவி செய்த அந்த தோழியின் செயல் என்னால் மறக்கவே முடியவில்லை.

அந்த நிகழ்ச்சியை எப்போது நினைத்தாலும் உடம்பே
சிலிர்த்து விடுகிறது'. இது போன்ற மனிதர்களும் பூமியில் இருக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருக்கிறது !."

எழுதியவர் : (24-Oct-21, 10:43 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 420

மேலே