" பசிக்கொடுமை " 1 "உலகில் 'பசி' என்ற...
"பசிக்கொடுமை"
1 "உலகில் 'பசி' என்ற ஒன்று , இல்லாவிட்டால் ,
வாழ்வில் 'ருசி' என்பதே
இல்லை.
2. ஒரு 'கவளத்தை' புசித்து
விட்டால் போதும்,
எந்த "அவலமான'
வாழ்க்கையும் கூட
ரசித்து விடும்.
3. 'கல்லாத மூடர்' ஆனாலும், ' பயமில்லாத வீரன்'
ஆனாலும்,
பசித்திட்டால், பத்தும்
பறந்து விடும்.
4. ' முற்றும் துறந்த.
முனியானாலும்',
கற்றுத்தேர்ந்த கவி'
ஆனாலும்,
வயிற்றை பற்றும் பசி
வந்து விட்டால்,
சுற்றும் முற்றும் மறந்து
விடும்.
5. வண்ணத்தை குழைக்கும், "ஓவியனானலும்",
எண்ணத்தை செயலாக்க
உழைக்கும் '
'தலைவனானலும்',
அன்னத்தை கண்டு
விட்டால் குழைவான்,
கிண்ணத்தில் அதை
போட வேண்டி இழைவான்.
6. 'உலகம் இயங்குவது'
பசிக்காகதான்,
' உடல்கள் உழைப்பதே"
பசிக்காகத்தான்,
உயிர்கள் ஓடுவதும்,
உண்மையே
ஒடுங்குவதும்!
பசி, பசி, அந்த 'பசிக்காக
தான்'.
7. தனி ஒருவன்
பசித்திருந்தால்,
இந்த உலகமே கூட
அழிந்து விடலாம்,
இதை நான் கூறவில்லை,
பசியின் கொடுமை
அறிந்து
கொண்ட 'நாக்கு',
கற்றுணர்ந்த அறிஞர்
பெருமக்கள் சொன்ன
'வாக்கு.'
8. இனி யாரும் 'யோசிக்க'
கூடாது,
பசி என்று யாரும் '
யாசிக்க' கூடாது!.
பசி பிணியை,
போக்கிடுவோம்!
வசிக்கின்ற உலகை
என்றென்றும்,
காத்திடுவோம்".
-----------