தீபம்

"உயிரை தருபவள் தாய் என்றால்,
உலகை காட்டுபவர் தந்தை!

நிலத்தில் தவழ வைப்பவள்
தாய் என்றால்,
அதில் நற்பாதையைக் காட்டி
நடக்க வைப்பவர் தந்தை ,

வானத்தை பார்க்க வைப்பவள்
தாய் என்றால்,
அதில் பறக்க கற்றுக் கொடுப்பவர்
தந்தை,

உணவை ஊட்டி வளர்ப்பவள் தாய்
என்றால்,
அதை தேடும் வழியை கற்றுக் கொடுப்பவர் தந்தை,

சோதனையில் உடன் இருப்பவள்
தாய் என்றால்,
அதை சாதனையாக்க கற்று
கொடுப்பவர் தந்தை,

தாய் என்பவள் தெய்வம் என்றால்,
தந்தை என்பவர் அவள் உறையும் கோயிலாகும்,

இரண்டையும் ஜொலிக்க
வைப்பது நல்ல பிள்ளைகள்
எனும் தீபமாகும்".

எழுதியவர் : (11-Oct-22, 7:00 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : theebam
பார்வை : 126

மேலே