வெட்டியானின் முணுமுணுப்பு ஊரே கருமேகம் சூழ்ந்திருந்த வேளையில், அள்ளி...
வெட்டியானின் முணுமுணுப்பு
ஊரே கருமேகம் சூழ்ந்திருந்த வேளையில், அள்ளி முடிந்த தலையில் மல்லிகைப்பூச்சுடி மகாலட்சுமி போல் அமர்ந்திருந்தாள் ... என்ன மசமசன்னு பார்த்துகிட்டு இருக்கிங்க.. அழுதது போதும் சட்டுபுட்டுன்னு ஆக வேண்டியத பாருங்க... என்று வெட்டியானின் முணுமுணுப்பு.... தலையில் வைத்த மல்லிகைப்பூ காயும் முன் அதை தகர்த்த வேண்டிய சூழல்... மாங்கல்யத்திற்கு பூசிய மஞ்சள் கூட நிறமாறவில்லை... மூதாட்டி ஒருத்தி அழுகுறலுடன் வந்தாள்... இந்த பிஞ்சு புள்ளைய வச்சுக்கிட்டு நீ என்ன பன்னப்போரியோ... இப்படி சின்ன வயசுலயே விட்டுட்டு போய்ட்டானே என்றவாறு... கண்ணீரில் மூழ்கி கிடக்கும் என்னவளை எழுப்பி தாலி அறுக்க அழைத்தாள்... காவிரி நீர் கண்களில் வழிந்தவாறு என்னவள் என் கண் முன்னே காட்சியளித்தாள் ... தவழ்ந்து சென்று ஆறுதல் கூற நினைத்தேன் அறியாத வயதில்.... அறியாத முகம் பார்த்து அறிந்து கொண்டாள்.. இனி உனக்காக என் பயணம்... என் உயிர் உள்ளவரை உனக்காக மட்டுமே துடிக்கும் என்று என்னை கட்டியணைத்து புரிய வைத்தாள்... அந்த தருணம் முதல் இந்த தருணம் வரை எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்....