வேரின் வீரியம்

வேர்களின் முனையில்
தெரிகிறது
விதையின்
வீரியம்

ஹாக்கிங்ஸ் ஊணத்தில்
தெரிந்தது
உயிரின்
தைரியம்

ஜெயிப்பதற்கு உடல்
வேண்டாம்
உயிர்
போதும்

மரணத்தில் எழுதப்படுவதில்லை
நமக்கு
இன்றுமட்டும்
என்று

ஜனனத்தில் சொல்லப்படுவதில்லை
நமக்கு
மரணம்
முடிவென்று

சரித்திரத்தின் பக்கங்கள்
கனக்கிறது
நம்பிக்கை
அடிவைக்கும்போது

எழுதியவர் : (15-Mar-18, 12:08 pm)
சேர்த்தது : sanmadhu
Tanglish : verin veeriyam
பார்வை : 96

மேலே