நான் சிலுவைக்கு

ஒன்றுமே இல்லாத
இந்த
வாழ்க்கையில்
விதைத்ததில்
தளிர்ந்தது தானே
நாம்

இருக்கும் நொடிகளை
மரண
வீதியில்
கழிக்கிறோம்
விதிகளுக்கு
உட்பட்டு

ஒவொருவர் வாழ்விலும்
முளைத்து
படர்கிறது
ஆழம்
அறியாத
காலவேர்கள்

புத்தனும் ஏசுவும்
சுமந்து
களைத்தார்கள்
மானுடம்
வளர்த்த
மிருகத்தை

சிலுவையும் போதியும்
தனித்து
நிற்கிறது
நான்
சிலுவைக்கு
நீங்கள் ......

எழுதியவர் : (15-Mar-18, 11:32 am)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 61

மேலே