தமிழ்

பிறமொழி யாவும் தான்
இயங்கத் துணைத் தேட
தான் இயங்கத் துணை
தேடத் தனித்த மொழியாம்...!

நான் பிறழாமல் எந்தன்
வாழ்வும் பிறழாமல்
வாழிக் காட்டிட வழிநூல்
ஓராயிரம் தன்னகத்தே
கொண்ட மொழியாம்....!

வழிநூல் யாவும் உலக
வாழ்வுக்கு வித்திட
அதைப் பார்த்தோர் கண்ணோட்டம்
மாற்றியதால் அஃது
அரிவியலுக்கும் வித்திட
வைத்த மொழியாம்.....!

இவ்வுலகில் உயிர்த்த ஐந்தறிவு
முதல் ஆறு அறிவு
உயிர்கள் வரை உதிர்த்த
முதல் சொல்
எந்தன் மொழியாம்........!

யாம் கற்ற எம் தமிழ்
மொழியால் நெஞ்சுரம்
ஏறிய திமிரினில் எம்தமிழ்
மொழிகளுக்கு முத்த
மொழியென திமிரிட வைக்கிறது....!

எழுதியவர் : விஷ்ணு (1-Feb-18, 1:39 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : thamizh
பார்வை : 491

மேலே