வறுமை

வறுமை

அட்சய பாத்திரத்தில் உன்னை வைத்தானே
ஏழை வாழ்வினில் உன்னைப் பிணைத்தானே!

செறுகளம் புகுந்தாயே சரிநிகராய் நின்றாயே!
சிறுகுடில் புகுந்தாயே பெருமாளிகையென வாழ்கிறாயே!

கண்ணீரில் கரையும் இளமை
ஆசை பொற்குவியலில் தகித்திடும் கானல்!

இந்திரனுக்கு நீ பகையா
ஏழை ஆசைக்கு நீ தடையா!

வெஞ்சுடரில் தோலுரிந்த புழுவாய்
உயிர்பசிக்கு யாசிக்கும் முதுமை!

சிற்றெறும்பின் பசியாற மலையும் உணவானதே
உன் பசிக்கு ஏழைத் திறமைகள் இரையானதே!

புன்னகையற்ற பூந்தோட்டத்தில் ஓயாத
அலைகளாய் ஆர்பரிக்கிறாய்!
ஏழை வலிகளின் சுவடுகளில்
உன் கால்களைப் பதிக்கிறாய்!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (2-Jun-18, 2:01 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
Tanglish : varumai
பார்வை : 1720

மேலே