அவமானம்
வெறும்பயல் என்று எவனுமில்லை,
ஏதாவது அவனிடம் இருக்கும்.
இருக்கிறது என்று இறுமாந்திருக்கும்
பேர்வழியைக் காட்டிலும்
கூடுதலாகக்கூட
வெறும்பயலிடம் இருக்கலாம்.
இல்லாமை என்பது கேவலமில்லை
அறிவில்லாமை தான் அவமானம்.
வெறும்பயல் என்று எவனுமில்லை,
ஏதாவது அவனிடம் இருக்கும்.
இருக்கிறது என்று இறுமாந்திருக்கும்
பேர்வழியைக் காட்டிலும்
கூடுதலாகக்கூட
வெறும்பயலிடம் இருக்கலாம்.
இல்லாமை என்பது கேவலமில்லை
அறிவில்லாமை தான் அவமானம்.