பூவே பூ சூட வா
![](https://eluthu.com/images/loading.gif)
நீ தந்த நினைவு மாெட்டுக்கள்
நித்தமும் மலர்கிறது பூக்களாய்
வாசங்களை முகரந்த படி
உன் முகம் காண்கிறேன்
பூக்களாய் மலர்ந்த நினைவுகளை
மாலையாய் காேர்க்கின்றேன்
தேவதை உன் தடம் தேடி
காத்திருக்கின்றேன் காதலுடன்
வாசம் வீசிய தென்றலாய்
இதயம் நுழைந்த சிறு மலரே
என் சுவாசம் நீயாக வேண்டும்
வாழ்வின் வரமாய் நீ வேண்டும்
காதல் கை கூட வேண்டும்
பூவே பூ சூட வா