நானும் காதலிச்சேன்

எனக்குள்ளும் காதல் என்ற ஆச்சர்யம் படர துவங்கிய காலம்,.
ஏன் எனக்கு ஆச்சர்யம்,
நானும் சினிமாதனமான காதலை வெறுத்தவன்,
காமமே காதலை முன்னிருத்துகிறது என்பதே அதற்கு காரணம்,.
அது டீன் ஏஜ் பருவம்,
எனக்குள் இரண்டாவது இதயம் பூத்த நேரம்,
அவளால் எனக்குள் ஏகபட்ட மாற்றங்கள்,
அந்த பாதிப்புகளின் உணர்வு குவியலுக்கு காதல் என்று பெயரிட்டேன்..
அவளை சில நேரம் பார்க்காவிட்டால்,
அதையே நினைத்து பல நேரம் அவள் வரும் திசையையே பார்த்துக் கொன்டிருப்பேன்..
அவள் என் சந்தோஷத்திற்கும்,
தவிப்புகளுக்கும் இடையே ஒளிந்து கொண்டிருந்தாள்.
அவள் வரும் பாதையில்,
அவளுக்கு முன் காத்துகிடப்பேன்..
சில நிமிடங்கள் காண,
பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறேன்,.
அவளை காணாத வரை,
நானும் காணாமல் போயிருந்தேன்,
அவளை ஒருதலையாய் காதலித்தேன்,
இப்போதுவரை அதுவே தொடர்ந்து முற்றுபெற்று விட்டது.
அவள் நினைவுகள்தான் என் பொக்கிஷம்,
இன்று,
வறுமையில் வாடுகின்றேன் அதே நினைவுகளால்..
நான் காதலில் விழ,
அவளின் கண்களும் ஒரு காரணம்.,
அவளின் விழிகளில்தான் எத்தனை வலிமை,
எத்தனை வன்மை..
அந்த ஒரு ஜோடி விழிகள்தான்,
என் சொர்க்கமும்,நரகமும்..
அவள் என்னை பார்ததும்,தவிர்ததும் அந்த விழிகளால்தானே..
இன்று என் கண்ணீருக்கு காரணமும்,
அவளின் முதல் பார்வைதானே..
அவளை விரும்புவதற்கு முன்பு வரை,
எனக்கு எதுவும் நினைவில் இல்லை.
இன்றும் அப்படித்தான்,
அவளை தவிர வேறெதையும் எளிதில் நினைக்க முடியவில்லை..
அவளிடம் நான் பேசும் போது,
பதில்களாய் மௌனத்தை மட்டுமே தருவாள்,
அதனால்தான்,
என் நினைவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்த வசதியாய் போய்விட்டதோ..
பிறந்த தேதி தெரிந்த எல்லோருக்கும்
இறந்த தேதி தெரியாது.
ஆனால்,
எனக்கு அதையும் சுட்டி காட்டிவிட்டு சென்றவள்,
அவள் பிரிந்து சென்ற ஆகஸ்ட் 18 தான்,
நான் இறந்ததாக உணர பட்ட நாள்,.
நான் அவளை விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டேன்,
பதிலுக்கு அவள்,
விரும்பவில்லை என்றாவது சொல்லிருக்க வேண்டுமென ஆசைபட்டேன்,.
அவள் சொல்லாமல் சென்ற அன்றிலிருந்துதான்,
என் காதலும் அதே இடத்தில் தேங்கிவிட்டது..
இருவரும் பயணம் செய்வது,
அநேகமாய் ஒரே பேருந்தாகத்தான் இருக்கும்.
அதற்காகவே,
அவள் தவறவிட்ட பேருந்துகளை
நானும் தவிர்திருக்கிறேன்..
எப்போதாவது அவளருகில் நிற்கும் சந்தர்பம் கிடைக்கும்..
அது மட்டும்தான் அவளுக்கும் எனக்குமான பரிசம்,.
இன்று கூட அதே பேருந்தில் பயணம் செய்கிறேன்,
ஆனால் அங்கு அவள் இல்லாத வெற்றிடத்தை உணர்ந்தேன்..
அவளுக்கு அனுப்பிய வாழ்த்து அட்டைகளும்,
செவி வழி செய்திகளும்,
இன்னும் பத்திரமாய் வைத்திருப்பாளா என்று தெரியவில்லை,
என்னை போல..
அவளை மணமுடிக்க
மண மாலையோடு வந்தேன்,
அவளோ மன முறிவு ஏற்படுத்தி,
மலர் வளையம் தந்தாள்,.
இருவரும் ஒரே போல் பார்த்திருக்கிறோம்,
சிரித்திருக்கிறோம்,
ஒருமுறை ஒரே நேரத்தில் அழுதும் இருக்கிறோம்..
ஆனால் இருவரும் ஒன்றாய் வாழவும் இல்லை,
ஒரேடியாய் மறக்கவும் முடியவில்லை.
அவளின் பிரிவை,
அவளின் புகைப்படமும்,
என் புகை பழக்கமும் சிறியதாய் ஆறுதல் படுத்திருக்கும்,
ஆனால் அந்த வலி ஆறாத ரணம் என்று யாருக்கு தெரியும்..
காதலை முயற்ச்சித்து பார்த்தவர்கள்,
கன்டிப்பாய் தற்கொலையையும் முயற்ச்சிதிருப்பார்கள்,
நானும் விதிவிலக்கல்ல,
அதிலும் தோல்விதான்..
அப்போது நான் இறக்காததால்தான்,
இப்போது,
இறந்த காலத்தை பற்றி பேசுகிறேன்,
நான் விரும்பிய முதல் காதல்,
எனக்குள் ஏதோ சிறு விசும்பலுடன் விழித்து கொண்டுதான் இருக்கிறது,.

எழுதியவர் : சையது சேக் (19-Feb-18, 7:17 pm)
பார்வை : 585

மேலே