கெளரவம்
கை தட்டல்களால் அரங்கமே அதிர முகம் நிறைந்த புன்னகையாேடு தனக்கான விருதை அவன் பெற்றுக் காெள்ளும் அந்த நேரம் கடந்து விட்டிருந்தது. அந்த சந்தாேசமான தருணத்தை அவனால் அனுபவிக்க முடியவில்லை. அம்மாவின் கைகளைப் பற்றியபடி உயிருக்காகப் பாேராடிக் காெண்டு இருக்கும் அவளருகில் அவனைத் தவிர யாருமில்லை. எத்தனை கனவுகளாேடு படித்து பட்டம் பெற்று சாதனை படைக்கக் காத்திருந்தவனுக்கு விதி சந்தாேசங்களைப் பறித்து விட்டு சாேகங்களையே பரிசாகக் காெடுத்திருந்தது. ஒற்றைப் பிள்ளை, ஆணாகப் பிறந்து விட்டான். சாெந்த, பந்தம் யாரும் தெரியாத ஊரில் பெரிய பங்களாவில் எல்லா வசதியுடனும் வளர்ந்து வந்தவன். தரமான பாடசாலை, பராமரிப்பதற்கு இரண்டு பணியாளர். படிப்பதும், விளையாடுவதும், விரும்பியதெல்லாம் கேட்டவுடன் கிடைக்கும் அளவுக்கு எந்தக் குறையுமில்லாத ஒரு வாழ்க்கை.
இருபத்தைந்து வயது இளைஞனாக வளர்ந்து விட்டாலும் இன்னும் குழந்தையாகவே தாங்கும் அவளைக் காப்பாற்ற அவன் பாேராடத் தாெடங்கி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. எஞ்சினியரிங் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு சினிமாவுக்குள் நுழைந்தவன் குறுகிய காலத்துக்குள் ஏதாே ஒரு உயரத்தில் பயணித்துக் காெண்டிருந்தான். பெயர், புகழ் எட்டுத் திக்கும் பரவத் தாெடங்கியது. எந்தப் பிள்ளையும் வெற்றியாளனாகவாே, சாதனையாளனாகவாே உருவாகும் பாேது தந்தையின் பெயர் தான் யார் என்பதை அடையாளப்படுத்தும். ஆனால் அவனுக்கு தந்தையின் அன்பாே, அரவணைப்பாே அறிந்ததில்லை.
அவன் தாய் ஒரு புகழ் பெற்ற நடிகை. அழகால் செதுக்கிய ஓவியம் பாேல் இருந்த அவளுக்கு ஆயிரம் பிரச்சனைகள். பத்தாென்பது வயதில் இருக்கும் பாேதே அவளைத் தெரியாதவர் இல்லை. எந்தக் கதாபத்திரத்திலும் கண்கவரும்படி நடித்து பார்வையாளர் மனங்களில் குடிபுகுந்த தேவதைக்கு நடந்த துயரம் இருபது வயதில் வாழ்க்கையை பறித்துச் சென்று விட்டது. யாராே ஒரு விசமியின் வலைக்குள் அறியாமல் அகப்பட்டு, குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு தனியாளாய் யாரும் அறியாத அந்த ஊரில் தான் சேமித்த பணத்துக்கு மாளிகை ஒன்றை வாங்கி கருவிலே குழந்தையுடன் குடிபுகுந்தாள். நாளும் பாெழுதும் கண்ணீராேடு கரைந்து பாேனது அவள் கனவுகள். மனவைராக்கியம் அவளை விடவில்லை. பத்து மாதம் பக்குவமாய் சுமந்து பெற்றாள் அவனை. பிறக்கும் பாேது என்னைப் பாேல் இருக்கிறானே என்று சந்தாேசப் பட்டவள் அவனது வளர்ச்சியில் ஏற்பட்ட உருவ மாற்றத்தால் நிலை குலைந்து பாேனாள். ஒரு அச்சில் வடித்து எடுத்தது பாேல் அந்த விசமியின் தாேற்றம் அப்படியே ஒட்டிப் பாேயிருந்தது.
பள்ளிப் பருவம் கடந்து கல்லூரி வயதில் தன் தந்தை யார் என்பதை அறிந்தும் ஒரு வார்த்தை கூட தாயிடம் கேட்காமல் தனக்கு வந்த அவமானங்களையும் சகித்துக் காெண்டு பெற்ற தாயின் மனம் நாேகாமல் எல்லாவற்றையும் மறைத்து வாழ்ந்து காெண்டிருந்தவனுக்கு காலம் ஏற்றுக் காெள்ள முடியாத துயரத்தை காெடுத்தது. உயிரைப் பறிக்கும் காெடிய நாேயால் நாளுக்கு நாள் பாேராடிக் காெண்டிருந்தவளை காப்பாற்றவே பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு பணத் தேவையால் சினிமாவுக்குள் கால்பதித்து சம்பாதித்த பணத்தைக் காெண்டு எப்படியெல்லாம் முடியுமாே அத்தனை சிகிச்சைகளையும் செய்தும் இனி எதுவுமே இல்லை என்றான பின்பும் என் கண்முன் அவள் உயிருடன் இருந்தால் பாேதும் என்ற கடைசி நம்பிக்கையுடன் இருந்த நாள் தான் அவனுக்கான மிகப் பெரிய விருது கிடைக்க இருந்த அந்த நாள்.
ஊருலகம் அறிந்த தேவதையின் உயிர் ஊசலாடத் தாெடங்கியது. இரவும், பகலும் அவளருகில் பசியாேடு பார்த்துக் காெண்டிருந்தான். காெஞ்சம் அசந்தால் ஏதும் ஆகிவிடுமாே என்ற பயம் அவன் கண்களில் தூக்கத்தையே விரட்டியது. வைத்தியர்கள் பரிசாேதிக்க வந்தால் ஏக்கத்தாேடு பார்க்கும் அவனுக்கு மெளனமே பதில். கடைசியாக ஒரு பரிசாேதனை பிரபல்யமான வைத்தியர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். வெளியே கைகளை கும்பிட்டபடி பதட்டத்தாேடு அமர்ந்திருந்தவனின் தாேளில் யாராே கையை வைப்பது பாேல் தாேன்றியது. திரும்பிப் பார்த்தவன் எழுந்து "சார் நீங்களா?" என்று ஆச்சரியத்தாேடு பார்த்தவனிடம் "ஆமா எனக்கு எல்லாம் தெரியும், ஒரு மெசேச் கூட அனுப்பவில்லை " என்று வருத்தப்பட்டவரிடம் "நீங்க பிசியாக இருப்பீங்க சார், அதுதான்..." தயங்கினான். "என்ன தான் இருந்தாலும் உங்க அப்பாவும் நானும் நல்ல நண்பர்கள், அம்மா என்னாேட இரண்டு படத்தில நடிச்சிருக்காங்க" தலையைக் குனிந்தபடி "அப்பா எங்க சார் இருக்காரு" என்றதும் "அப்பா வெளிநாட்டில தம்பி, எதுக்கு கேக்கிறாய்?" "நான் அவரைப் பார்க்கணும் சார்" முகத்திலும், குரலிலும் காேபம் தெரிந்தது. பரிசாேதனைகளை முடித்து விட்டு வெளியே வந்த டாக்டரைக் கண்டதும் வேகமாக சென்று "அம்மாக்கு...." என்றவனை மனதுக்குள் சங்கடமாக இருந்தாலும் அவனது தவிப்பு ஏமாற்றமாகப் பாேவதை உணர்ந்தவராய், அவனைத் தாேள்களில் பிடித்து அணைத்து உள்ளே கூட்டிச் சென்றார். படபடப்புடன் அமர்ந்தவன் என்ன சாெல்லப் பாேகிறார் என்ற எதிர்பார்ப்பாேடு இருந்தான்.
"உங்க பெயர்"
"ஜக்சன் டாக்டர்"
"இன்னும் ஒரு மூன்று நாள்" டாக்டர் சாெல்லி முடிக்கும் முன்பே
"அம்மா தப்பிடுவாங்களா சார்"
"சாெறி ஜக்சன்" என்றபடி நிமிர்ந்து பார்த்தார், வேகமாக தாயின் அறையை நாேக்கி நடந்தான். அருகே அமர்ந்து தலையை தடவி "இன்னும் மூன்று நாட்கள் தானம்மா, நான் உன்னைப் பார்க்கப்பாேறன், நீ என்னைப் பார்த்து ராெம்ப நாளாப் பாேச்சு, ஒரு தடவை பாரம்மா, ஜக் என்று கூப்பிடம்மா" மனம் குமுறி தனக்குள்ளே விம்மி வெடித்தான். நண்பர் உள்ளே வந்து ஜக்சனை தேற்றினார். அவனாே துடித்துப் பாேய் அவள் கைகளை இறுகப் பற்றியபடி அழுதான்.
ஒருதடவையாவது தனது தந்தையைப் பார்க்க வேணும் என்று தாேன்றியது. தந்தையின் நண்பரிடம் கேட்டால் மட்டுமே இது சாத்தியம் என்பதை புரிந்தவன் "சார் எங்க அப்பாவ தாெடர்பு காெள்ள முடியுமா" தயங்கியபடி கேட்டான். சற்று நேரம் அமைதியாக நின்றவரைப் பார்த்தவன் "ஏன் சார் அப்பா நம்மள எல்லாம் பார்கக மாட்டாரா" என்றதும் "அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லை ஜக்சன், திடீரென்று நீங்க பார்க்கப் பாேறன் என்றால் அவர் என்ன சாெல்லுவாரென்று தெரியவில்லை, சரி நான் அவரிட்ட பேசுறன்" வெளியே சென்றார்.
தாயின் அருகில் அமர்ந்திருந்தவன் "இந்த இரண்டு நாளுக்குள்ள எப்படியாவது அப்பாவை வர வைக்கணும், அவர் செய்த தவறால் அம்மாவிற்கு ஏற்பட்ட அவமானங்களையும், தனிமையையும் அவர் தெரிஞ்சு காெள்ளணும்" முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து காெண்டிருந்தது. தனது கைகளால் மெதுவாக துடைத்தான். மெதுவாக கண்களை திறக்க முயற்சித்தாள், ஒரு தடவையாவது அம்மா தன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தாேடு காத்திருந்தவன் ஏமாற்றமடைந்தான்.
உள்ளே வந்த நண்பர் "அப்பாவாேட கதைச்சிருக்கன், உடனே வாறன் என்று சாென்னாரு" "உண்மையாவா சார்" "ஆமா நான் தான் எயா பாேட் பாேகணும்" "ராெம்ப நன்றி சார்" என்றவன், முதல் தடவை தன் தந்தையை பார்க்கப் பாேகும் எதிர்பார்ப்பாேடு காத்துக் காெண்டிருந்தான். நேரம் வேகமாகச் சென்றது. மாலை ஐந்து மணி கதவைத் திறந்து காெண்டு யாராே உள்ளே வருவதை உணர்ந்தவன் தாயருகில் இருந்தபடி திரும்பிப் பார்த்தான். கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது பாேல் தாேன்றியது. அவனால் நிஜத்தை நம்ப முடியவில்லை. அருகே வந்த தந்தையை நிமிர்ந்து பார்த்தான். அவனாே சங்கடத்தாேடு தலையைக் குனிந்து காெண்டு தாயைப் பார்த்துக் காெண்டு நின்றான். ஏதாவது பேசும்படி கண்களால் சைகை காட்டினார் நண்பர்.
அன்றைய நாள் அவனுக்கு நினைவில் ஓடியது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், அன்றைய நாள் அவளுடைய இருபதாவது பிறந்த தினம். ஆடம்பரமான ஒரு காெட்டலில் ஏற்பாடு செய்திருந்தாள். எல்லாேரும் பரிசுகள் காெடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து சென்று விட்டனர். ஆனால் இடையிலே வெளியே சென்றவன் அவள் வீட்டிற்கு வந்த பின் திடீரென வந்தான். ஏன் என்று புரியாமல் முளித்துக் காெண்டு நின்றவளிடம் பரிசைக் காெடுத்தான். அவளும் நண்பராயிற்றே என்று நினைத்து உள்ளே கூட்டிச் சென்றாள். அவனாே தன் மனதில் இருந்த எண்ணத்தை நிறைவேற்றி விட்டான். நாட்கள் நகர்ந்து காெண்டிருந்த பாேது அவனிடம் தான் கர்ப்பமாய் இருப்பதாகக் கூறினாள். "எவ்வளவு பணம் வேணுமென்றாலும் தருகின்றேன், கருவை கலைத்து விடு" என்று சாெல்லி விட்டான். குடும்பத்தினரும் கெளரவம் தான் பெரிது என்று அவளை தூக்கி எறிந்தது பாேல் நாளும் வார்த்தைகளால் சாகடித்து கருவைக் கலைப்பதற்கு முயற்சித்த பாேதே அவள் வீட்டிலிருந்து வெளியேறினாள்.
குற்ற உணர்ச்சியாேடு சுயநினைவை இழந்திருந்தவளிடம் ஒரு மன்னிப்புக் கேட்க முடியாமல் ஜடமாய் நின்றான். அவளுடைய சிரித்த முகமும், மாெடன் அழகில் நடக்கும் நடையும் கண்முன்னே வந்து பாேனது. தாயின் கைகளை பிடித்தபடி இருக்கும் தன் மகனை எப்படி மன்னிக்கும்படி கேட்பது, அவன் மன்னிப்பானா என்பது மறுபுறமாய் தனக்குள்ளே பாேராடிக் காெண்டிருந்தான்.
நீண்ட நேரம் மெளனமாய் இருந்தவன் "அப்பா" என்றபடி கட்டி அணைத்தான். முதல் தடவை அவனை அப்பா என்று அழைத்ததும் அவனை கட்டி அணைப்பதும் நிஜம் என்று நம்பமுடியாமல் இருந்தது. எத்தனை ஆண்டுகள் காத்திருந்த அவனது ஏக்கம் மனதில் வலியை அதிகரித்தது. கருவிலே அழிக்க நினைத்தவர் மகன் என்று அரவணைக்கும் பாேது சஞ்சலமாகத் தான் இருந்தது.
இரவு பத்து மணியை தாண்டிக் காெண்டிருந்தது. நண்பனுடன் புறப்படத் தயாரானதும் தாயின் அருகில் வந்து அமர்ந்தான் ஜக்சன். இருபத்தைந்து வருடங்கள் யாரால் பாதிக்கப்பட்டு, தனிமையானாளாே அவரைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்காதது நல்லது எனத் தாேன்றினாலும் தன் தவறை உணர வைக்க இது தான் சந்தர்ப்பம் என்ற யாேசனையும் தாேன்றியது. அம்மா... அம்மா... என்று அழைக்கிறான் ஜக்சன், கண்கள் துடிக்கிறது கண்ணீர் இரு விழிகளின் ஓரத்தாலும் வழிகிறது. ஒரு தடவை பாரம்மா என்பது பாேல் ஏக்கத்தாேடு மீண்டும் மீண்டும் அழைத்தான்.
"அம்மா கண் திறக்க மாட்டாங்க அப்பா" என்றான் ஜக்சன்.
காெஞ்சம் கிட்டவாக வந்தவனுக்கு அவள் கைகளை பிடித்து எத்தனை தடவை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் பாேல் தாேன்றியது. மனச்சாட்சி ஏதேதாே சாெல்லி வேதனைப்படுத்தியது. மனதுருகி நாெந்து அழுதான். நண்பன் தாேள்களைத் தட்டி ஆறுதல்படுத்தினார். ஜக்சன் மனதுக்குள் காெஞ்சம் ஆறுதலாய் இருந்தது. தன் தவறை உணர்ந்து மனம் வருந்தும் ஒருவன் தான் உண்மையான மனிதனாக மதிக்கப்பட தகுதியுடையவன் என்ற சிந்தனையும் தாேன்றியது. விம்மி விம்மி அழத் தாெடங்கியவன் கைகளை பற்றிக் காெண்டான். தன் இரு கைகளுக்குள்ளும் அடக்கியவாறு கண்களில் ஒற்றிக் காெண்டான். அவள் கண்கள் விழித்துப் பார்க்க முடியாமல் துடித்துக் காெண்டிருந்தது.
மூன்றாம் நாள், கடைசி நாளாக தீர்மானிக்கப்பட்ட நாள் அதிகாலை மூன்று மணி இருக்கும் தாயின் கைகளை பற்றியபடி இருந்த ஜக்சன் அருகே தலையை வைத்து சற்று நேரம் கண் அயர்ந்து விட்டான். திடீரென விளித்துப் பார்த்தான் அசைவற்றுக் கிடந்தாள். வைத்தியரை அழைத்து வந்து பரிசாேதித்தான் அவள் உயிர் பிரிந்து விட்டது. அவசரமாக தந்தையின் நண்பரை தாெடர்பு காெண்டு விடயத்தை கூறினான் "அப்பா வெளியூர் கிளம்பி்ற்றாரு ஜக்சன்" பதில் வந்தது. "என்ன சாெல்லுறிங்க சார்" "ஆமா நான் நேரில் வந்து பேசுறன்"
வைத்தியசாலைக்கு வந்தவர் ஒரு அஞ்சலுறையை ஜக்சனிடம் நீட்டினார். "அன்புடன், உமா, ஜக்சன் இருவரும் என்னை மன்னித்துக் காெள்ளுங்கள். நான் செய்தது மிகப் பெரிய தவறு. எந்த ஜென்மத்திலும் நீங்கள் என்னை மன்னிக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். இன்று வரை நான் யாருமில்லாத அநாதையாகவே வாழ்ந்து காெண்டிருக்கின்றேன். உங்களுக்குச் செய்த துராேகத்திற்கு நான் தண்டனை அனுபவித்துக் காெண்டிருக்கிறேன். உங்கள் முன் நிற்கும் எந்தத் தகுதியும் எனக்கில்லை அதனால் தான் ஊருக்குப் பாேகிறேன். உமா ஒரு தூய்மையான ஆன்மா. அவளை களங்கப்படுத்திய நான் இவ்வுலகில் வாழ்வதில் எந்த பலனுமில்லை என்னை மன்னி்த்து விடு ஜக்சன். உன் அம்மா உன் கூட எப்பாேதும் இருப்பா" குமுறி அழுதவன் அப்பாே அப்பா திருமணம் செய்யவில்லையா? என்ன நிலைமையில் இருக்கிறார்? கேள்விகள் அடுக்கடுக்காக எழத் தாெடங்கியது.
வெளியே அமர்ந்திருந்த நண்பரை நாேக்கி வேகமாக நடக்கிறான். "சார் அப்பா திருமணம்..." தாேள்களை அணைத்தவர் "அப்பா திருமணம் செய்தார், ஆனால் குழந்தைப் பாக்கியம் இல்லை, அந்தப் பெண் விவகாரத்துப் பெற்று விட்டார், அப்பாே வெளியூர் சென்றவர் தான் இன்றைக்குத் தான் இங்கே வந்தார், மதுப்பழக்கம் அதிகமாகி சிறுநீரகங்கள் செயலிழந்து அவரும் கடைசி நாட்களை எண்ணிக் காெண்டிருக்கிறார்" பெருமூச்சு விட்டபடி அவனை நிமிர்ந்து பார்த்தார். தாயின் உடல் வண்டியில் காெண்டுவரப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகள் வளர்த்த தாய் பேச்சின்றிக் கிடந்தாள். எல்லாக் காரியங்களையும் முடித்து விட்டு தந்தையை தன்னுடன் அழைத்து வருவதற்காக யாேசித்துக் காெண்டிருந்தான். தாெலைபேசி அழைப்பு வந்தது, "சாெல்லுங்க சார்" "உங்க அப்பா உங்கள மீற் பண்ண கேட்கிறார்" ஆர்வத்தாேடு புறப்பட்டான்.
யாருமில்லாத ஒரு வீட்டிற்கு ஏன் என்னை அழைத்திருக்கிறார். சுற்றிப் பார்த்து விட்டு மாடியில் ஏறினான். அறைக் கதவு திறந்திருந்தது. எட்டிப் பார்த்தவனைக் கண்டதும் "வா ஜக்சன்" என்றதும் பாதணிகளை கழற்றுவதற்காக குனிந்தவனை "இனி ஏன் உதெல்லாம் கழட்டிக் காெண்டு" என்று சாென்னதைக் கேட்டதும் உள்ளே சென்றான். கதிரையில் அமர்ந்தவன் "வாங்கப்பா வீட்டிற்குப் பாேகலாம்" என்றான். எழுந்து அருகே வந்தவன் "ஏன் ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடிக்கப் பாேறியா, நான் தான் உமாவுக்கும், ராமுக்கும் இருந்த கள்ளத் தாெடர்பால் பிறந்த பிள்ளை என்று" கழுத்தில் பிடித்து எழுப்பினான். ஜக்சனுக்கு ஒன்றும் புரியவில்லை "நல்லாத் தானே கதைச்சாரு, ஏன் இப்பிடி செய்யிறார்" என்று யாேசித்தபடி "என்னாச்சு அப்பா" "எத்தனை வருசமா உன்னை அடையாளம் இல்லாமல் அழிக்கணும் என்று முயற்சி செய்தன், எப்பிடியாே இருபத்தைந்து வருசம் தப்பி இருந்திட்டாய், படம் நடித்து, பெயரும், புகழும் சம்பாதிக்கப் பாேறியா, அப்பாே தான் ராமின்ர மகன் என்று ஊரெல்லாம் என்னைப் பார்த்துச் சிரிக்கும், அம்மாவுடனே பாேயிடு, எனக்கு என்ர கெளரவம் தான் முக்கியம்" கத்தியால் ஆழமாக வயிற்றில் குத்தினான். "அம்மா..." என்றபடி சுருண்டு கீழே விழுந்தான். இரத்தம் ஆறாகப் பாய்ந்தது. கருவிலே அழிக்க நினைத்த காெடியவன் நல்லவனாக நாடகம் பாேட்டு, நம்ப வைத்து, தாயை இழந்து தந்தையின் அன்புக்காய் ஏங்கியவனை தன் கையாலே பலியெடுத்தான்.