காரியக்காரி

புது அலமாரி, புது தொலைகாட்சி பெட்டி, புது சோபா செட்டு புது ஏர் கூலர் வண்டியில வந்து யமுனா வீட்டுக்குள்ளப் போவுது அதை பார்த்த கங்கா...
"" ஏண்டி..காவேரி உன்னோட மகள் கோதாவரியும் அந்த யமுனா பொண்ணு வேல பார்க்கிற எடத்திலதானே வேலப்பக்குறா; அதுலேயும் அவளுக்கு இரண்டு வருஷம் பின்னால போய் சேந்தவ வீட்டல வந்து எறங்குறத பாத்தியா; உன் வீட்ல ஒன்னையும் காணோம்; இன்னும் மண்ணு சட்டியில பொங்கிக்கிட்டு கெடக்குறே; முன்ன சேந்தவளுக்கும் பின்னால சேந்தவளுக்கும் என்னடி வித்தியாசம்.""
"""என்னைக்கேட்டா.... எனக்கென்ன தெரியும்.... கெடைக்கிறத கொடுக்கிறா அவ கொடுக்கிறத வச்சி குடும்பத்தை நடத்துறேன "" என்றாள் காவேரி
""ஒரு வேள யமுனா அப்படி இப்படி சம்பாதிக் கிறாளோ "" என்றாள் கங்கா
""மொதல்ல...வாயக்கழுவுங்க நாமும் ஒரு பொண்ண வச்சிக்கிட்டு இருக்கோம் இன்னொரு பொண்ண இப்படி எக்குதப்பா பேசினா நம்ம பொண்ணைப்பத்தி எதுவும் யாரும் பேசமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்"" என்றாள் காவேரி
நம்மைப்பத்தி கங்கா ஆன்ட்டியும் காவேரி ஆன்ட்டியும் தப்பா பேசுவதை எப்படியோ யமுனாவுக்கு தெரிந்து இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்து
"" ஏங்க என்னை பாத்தா உங்களுக்கு எப்படி தெரியிது; காத்துக்கு பறக்கிற சோளப்பொறி மாதிரி தெரியிறேனா; கண்ணுக்கு நெறக்கலையா; வீட்டுக்கு ஏதாவது பொருள் வாங்குறவங்க எல்லாம் தப்பா நடந்தாதான் பொருள் வாங்க முடியுமா; இல்லேன்னா வாங்க முடியாதா"" யமுனா கேட்டாள்
"""ஐயய்யோ...அப்படி இல்லம்மா...நீ இரண்டுவருஷம் பின்னால வேலைக்கு சேந்தவ; பொருள வாங்குறா முன்னால போனவ வீட்டுல ஒன்னையும் காணோமே இன்னும் அந்த மண்ணு சட்டியிலேயே பொங்குறீயே என்று கங்கா என்னை கேட்டது""" என்றாள் காவேரி
"""உங்களுக்கு ஒன்னு தெரியுமா நாங்க சாப்பாட்டு நேரத்தில எல்லாரும் கும்பல் கும்பலா உக்காந்துதான் சாப்பிடுவது வழக்கம்; அன்றைக்கு அவளோட சிநேகிதிங்க லீவு போட்டு இருப்பாளுங்க போல இருக்கு அன்னைக்கு என்னோட கூட உட்கார்ந்து சாப்பிட வந்து பையில இருந்து சாப்பாட்டு டப்பாவ வெளியே எடுக்கும் போது ஒரு ஆண் உறை வந்து கீழே விழுந்தது அதை நான் பாத்துட்டு பார்க்காத மாதிரி இருந்துக்கிட்டேன் அவளும் எடுத்து நான் பார்த்து விட்டதை..பார்த்துவிடுவேனோன்னு சட்டுன்னு மறைச்சிட்டா அதை நான் பார்க்காத மாதிரி நடந்துக்கிட்டேன் அவள் விஷயத்தில உள்ளே நொழைஞ்சி ஆராய்ந்து பார்க்கும் போது உங்க பொண்ணு ஒருத்தனை விரும்புறா என்பது புலப்பட்டது """ யமுனா
"""பாத்தியாக்கா உங்க வாய கழுவச்சொன்னது சரியாப்போச்சா"""
""" அதுமட்டுமில்ல அவனுக்கு தவணை முறையில் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து; தவணையையும் தவறாம மாசாமாசம் இவளே கட்டிக்கிட்டு வறா; அப்படியிருக்கும் போது பணம் எப்படி உங்க கையில கொண்டுவந்து கொடுக்க முடியும் பொருளு எப்படி உங்களால வாங்க முடியும் """" யமுனா
"""என்னது...அதான் வீட்டுல இந்த திண்டாட்டமா...ஆமாம்மா...நீ சொல்றது நெஜம் தானா அவள் மேல உள்ள மனஸ்தாபத்தால........"""
""" அவளுக்கும் எனக்கும் இடையிலே எந்த மனஸ்தாபமும் கிடையாது உண்மையைச்சொன்னேன்
இதை நான் சொன்னேன்னு காயத்திரிகிட்ட சொல்லாதீங்க
நீங்களாவும் கேட்டுக்காதீங்க அவளா
சொல்ற நாள் ரொம்ப தூரத்தில இல்ல
உங்க காதுக்கு தானா வரும்
அப்போ பேசிக்கங்க """"என்றாள் யமுனா
"""யமுனா நான் உன்னை தப்பா பேசினது என்னமோ உண்மைதான்
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் அத்துபோயிடுமுன்னு சொல்லுவாங்க, இல்லன்னு பொய் சொல்லி கெடைக்கிற கால் வயித்து கஞ்சியை எழக்க விரும்பல அதுக்காக என்னை மன்னிச்சிடுமா""""
"""காவேரி ஆன்டியின் வாயில் கையை வைத்து மூடி ""ஐயய்யோ வயசில பெரியவங்க எனக்கும் அம்மா மாதிரித்தான் மன்னிப்பு கின்னிப்புன்னு பெரியப் பெரிய பேச்செல்லாப் பேசாதீங்கம்மா அப்படி சொன்னா தான் என்ன இதுவே என் அம்மா சொல்லியிருந்தா பொருத்துக்கிட்டு போய் இருந்திருக்கமாட்டேனா அப்படி நெனைச்சிக்கிறேன்...என்..மடியில கனம் இல்ல அதனால எனக்கு ஒரு பயமும் இல்ல என்ன....இருந்தாலும்..நீங்க பேசிக்கிட்டது உங்களோட போறதில்லை அக்கத்துல பக்கத்தில இருக்கிறவங்க காதில் விழுந்தா...அதை இன்னும் அவுங்களுக்கு பழக்கப்பட்ட நாலு பேருகிட்ட சொல்லுவாங்க இப்படியே ஊரு பூரா பரவிடும் அப்புறம் நான் தெருவுல நடக்கமுடியாத நிலவரம் வந்துட கூடாதேன்னுதான் உங்கள கூப்பிட்டு விசாரிச்சேன் """ யமுனா
"" அது என்னமோ ஞாயம் தான்..நாங்க இனி இதப்பத்தி பேச்சே எடுக்கமாட்டோம் எங்கள நம்பு யமுனா ஆமாம்.....உங்க .அம்மா..அப்பால்லாம்..எங்க இருக்காங்க.""
"""அவுங்கள இங்கே கூட்டியாரத்தான் இவ்வளவும் செய்யிறேன் ஊர்ல எங்க வீடு தென்னங்கீத்துல கட்டினது அதுக்கு ஆறு பங்காளிங்க ஒருத்தர் பேச்சை ஒருத்தர் கேட்கிறது இல்லை அவுங்க கூடவெல்லாம் எங்களால் சண்டையிட்டு கொண்டிருக்க எங்களால் முடியாது அதனால் மறு கூறை நெய்ய முடியல மழைகாலம் வேற வர இருக்கு வீடு எங்கபாத்தாலும் ஒழுவும் வயசானவங்க என்ன பண்ண முடியும் தூரத்தில் இருக்கும் அவுங்கள பத்தி நான் நெனைச்சி வருந்துறதும் என்னை நெனைச்சி அவுங்க வருந்துறதும் இனி இருக்கக் கூடாதுன்னுதான்"""
"""அண்ணன் தம்பிங்க"""
"""யாரும் கெடையாது நான் ஒண்டிகட்ட ஒருத்திமட்டும் தான் அவுங்க எல்லாம் இருந்திருந்தா எனக்கு ஏன் இந்த வேலை இந்த வீட்டை வேலை செய்யிற எடத்தில வங்கி மூலமா கடன் வாங்கி கெடைச்சது மாசம் இரண்டாயிரம் தான் தவணை அது சம்பளத்தில இருந்து நேரா கடன் வாங்கின வங்கிக்கே போயிடும் அது ஒன்னும் சிரமமா தெரியல வட்டிகட்டினாலும் நமக்குன்னு ஒரு சொந்த வீடு ஆவப்போவுதில்ல அந்த சந்தோஷத்தில தவறாம தவணையை கட்டியாறேன்"""
""" இது புள்ளையா நமக்கும் வாய்ச்சிருக்கே அது புள்ளயா....உன்னை நெனைச்சா எனக்கு பெருமையா இருக்கும்மா என் வயிற்றில் இந்த மாதிரி புள்ளைங்க பொறக்க இல்லையேன்னு ஏக்கமாவும் இருக்கு இருந்து என்ன பிரயோஜனம் நல்லதும்மா...காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணிக்கமா"""
"""நானா இதுவரை எவனையும் ஏறெடுத்து பாத்ததில்ல அப்படி பார்த்து இருந்தால் என்னைப் பெத்தவங்களை இழந்து இருப்பேன் இல்லேன்னா பிச்சை எடுத்து வயிற்றை குழுவும் கோலத்தை பார்த்துக் கண்ணீர் விட்டு இருப்பேன்......பாப்போம் ம்...ம்..அம்மா கோதாவரிகிட்ட .....ஏன்னா
நமக்கு முகப்பரிட்சயம் உள்ளவங்க யாரா இருந்தாலும் தவறான பாதையில போறது தெரிஞ்சா அவுங்கள திருத்தப்பாக்கனுமே ஒழிய கைக்கொட்டிசிரிக்கக்கூடாது அப்படிப்பட்டவங்க மனிதர்களில் சேத்திக்கை இல்லை அதனாலத்தான் சொன்னேன் அதுவே என் கூட பொறந்த சகோதரியா இருந்திருந்தா மனசு என்ன வேதனை படும் இதனால எங்க சிநேகிதம் கட்டாவக்கூடாது"""
"""இல்லம்மா நீ சொன்னதா நான் சொல்லமாட்டேன் பயப்படாதே நானும் அவள ஒன்னும் கேக்கப்போறதில்ல
ஏன்னா அவளுக்கு அப்பா இல்ல உன்னமாதிரி அவளும் ஒருத்திதான் அவளா சொன்னா உண்டு எவனையோ விரும்புறான்னு சொன்னியே அவனுக்கே""""
"""சரிம்மா..."""
கைப்பேசி அலறியது எடுத்து யாரு....""யமுனாக்கா...யமுனாக்கா...கோதாவரி கூட சுத்திக்கிட்டிருந்தானே ஒரு பொறம்போக்கு கசமாளம் அவனுக்கு வேற பொண்ணோட கல்யாணமாம் அவனோட தங்கச்சியே எனக்கு போன்ல சொன்னா நான் அவ பேசினத போன்லேயே பதிவு பண்ணிட்டேன் நீ ஆப்பீஸுக்கு வந்ததும் போட்டு காட்டுறேன்""
""இது கோதாவரிக்கு தெரியுமா""
""தெரியலையே யமுனா""
""யமுனா..கோதாவரிக்கு போன் போட்டா
யாரு..கோதாவரியா..நான் யமுனா பேசுறேன்...ஆமாம்..நீ....தவணைமுறையில...ஒரு மோட்டார் சைக்கில் வாங்கினியே..அது யார் பேர்ல வாங்கினே...""
""ஏன்...எம்பேர்லதான் இருக்கு...ஏன்..என்னாச்சி""
இல்ல....எனக்கும் அதைப்போல ஒன்னு வாங்கனும் அதனால் கேட்டுத்தெரிந்து கொள்ளலாமேன்னுதான்
ஏய்...ஏய்....இல்ல...வேறு ஏதோ விஷயம் இருக்கு..என்ன அது....
""இது போன்ல பேசவேண்டிய விஷயம் இல்ல நான்..ஆப்பீஸ்ல...வந்து நேரடியா சொல்றேன்""
""சரி...வச்சிடுறேன்...""
""ஆப்பீசில் கோதாவரியை சந்தித்து...மொதல்ல...இந்த போன் சொல்றத கேளு...உனக்கே தெரியவந்துடும் **....கோதாவரி கூட சுத்திக்கிட்டிருந்தானே என்னோட அண்ணன் அவனுக்கு வேற எடத்தில பொண்ணு பாத்து கல்யாணம் நடக்கப்போவுது எனக்கு காயத்திரியை நிறைய புடிக்கும் அவுங்களால தடுத்து நிறுத்த முடியுமானா கொஞ்சம் சொல்லுங்களேன் நான் அவனோட தங்கச்சி சிந்து பேசுறேன் அக்கா நான் உங்களுக்கு தெரிவிச்சதா போட்டு கொடுடுத்துடாதேக்கா மனசு கேக்கல கோதாவரிக்கே போன் போட்டேன் சுச்டுஆப்ன்னு வருது அதனாலத்தான் உங்களுக்கு போன்போட்டேன் சாரிக்கா வச்சிடுறேன்க்கா ** இது யாரோட குரல் தெரியிதா....
இது...நான் பழகுறேனே அவனோட தங்கச்சியோட குரல் ....அவள் நெனைச்சிக்கிட்டு இருக்கிறாள் நான்
அவளோட அண்ணனை காதலிக்கிறதா
அது என் தவறு இல்லை
""ஆமாம்...வண்டி நெஜமாவே உன் பேர்லதான் இருக்கா""
""கடன் என் பேர்ல தானே இருக்கு வண்டியும் என்பேர்தான் இருக்கு ஆர்.சி. புக்கும் என்பேர்லதான் இருக்கு கடன் முடியிற வரைக்கும் அது என் பேர்லதான் இருந்தாகனும்""
""இப்போ..நீ என்ன பண்ணப்போறதா இருக்கே""
""எனக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்
""நீ அவனை எங்கே இருந்து புடிச்ச ""
""ஒருநாள் ரோடு கிராஸ் பண்ணும் போது நடு ரோட்டில் நின்று விட்டேன் இந்த பக்கதிலேயும் ஹார்ன் அந்த பக்கத்தில் இருந்தும் ஹார்ன் அந்த பக்கம் போவனுமா இல்லை இந்தப் பக்கம் போவனுமான்னு ஒன்னும் புரியாமல் பயந்து போய் நிற்கும் போது அவன் வந்து கையை பிடித்து இழுத்து வந்து மறு பக்கம் ரோட்டில் விட்டு தண்ணி வாங்கி குடிககுடிக்க வச்சி அனுப்பி வைத்தான் பிறகு அடிக்கடி சந்தித்து பேசுவான் அப்படியே பழக்கமாயிடுச்சி ""
""அவன் மேல நீ எந்த அளவுக்கு நம்பிக்கை வச்சிருக்கேன்னு உனக்குதானே தெரியும்""
ஆமாம் எனக்கு தான் தெரியும் ஆனா
நீங்க எல்லாம் என்னை தப்பான விழியாலத்தான் பார்த்தீங்க என்பதும்
தெரியும் ஆனா அவன் என்னை அடைய
அவனுக்கு தெரிஞ்ச வித்தைகளை எல்லாம் பண்ணி ப்பார்த்தான்
வித்தையா அது என்னது
ஒரே ஒரு தடவைன்னான் அசையல ஆண் உறையை எனக்குத்தெரியாம என் பையில போட்டுபார்த்தான் அதைப்பார்த்து எனக்கு மூடுவந்து அவனைத்தேடிப் போயிடுவேன்னு இதையெல்லாம் பொம்பளைங்க நெனைச்சாத்தான் அந்த மரமண்டையில இல்லை நானும் கண்டுக்கவில்லை இங்கே வா அங்கே வா ன்னான் அசையல
பிறகு
பிறகு என்ன பிறகு இவள் நமக்கு சரிபட்டு வரமாட்டாள்னு தெளிவாக தெரிஞ்சிக்கிட்டான் அதுக்கப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணான் எல்லாம் நெனைக்கிறாங்க என்னை பார்த்து அவள் கெட்டுப் போயிட்டான்னு நெவர்
அப்புறம் எப்படி எதுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தே
அந்த இடத்தில் எனக்கு தெரிஞ்சவர் அதாவது என் அப்பாவிற்கு சிநேகிதர் அங்கே வேலை பார்க்கிறார் இவன் இதுவிஷயம் தெரிந்து உன் கணக்கில எனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி
கொடு உன்னோடு ட்யூவை உன் சம்பளம் மூலமா அவங்களுக்கு போய் சேரும் அந்த நீ எனக்கு கட்டுகிற பணத்தை உன் வங்கியில் மாசா மாதம்
நான் போட்டு விடுறேன்னான் சரியா
பட்டது ஒத்துக்கொண்டேன் அவனும் தவறாம போட்டுக்கிட்டு வந்தான் ரிசிப்டை ஏங்கிட்டே கொண்டுவந்து கொடுத்து விடுவான் இதோ நீயே பார்
யமுனா பார்த்தாள் எல்லாம் சரிதான் இப்போ அந்த மோட்டார் சைக்கிள் அவனுக்கு எப்போ திருப்புவே
கடன் பூராவும் அடைஞ்ச பிறகு இதுவரை அவன் போட்டுவந்த பணத்தில் நான் ஒரு பைசாகூட எடுக்கல நீ வீடு வாங்கின மாதிரி நானும் ஒரு வீடு வாங்கிடுவேன்
கிள்ளாடிடி நீ கேட்கவே பெருமையா இருக்கு கோதாவரி ரியலி ஐ அப்ரிஷேட் யூ இந்த விஷயம் மட்டும் உன் அம்மாவுக்கு தெரிஞ்சா தலைசுற்றல் வந்து விழுந்தாலும் விழலாம் அப்புறம் வண்டி
என் கடன் முடிந்ததும் வண்டி அவனுடையது பேப்பர் எல்லாம் அவன் பேருக்கு மாறிடும் அதாவது இந்தபணம்
வீட்டுக்கு போயி இருக்கும் அம்மா அந்த செலவு இந்த செலவுன்னு செலவாதான்
போயி இருந்திருக்கும் இப்போது அம்மாகவும் வீட்டை சமாளிச்சிட்டாங்க பணமும் சேந்துட்டது எப்டி இந்த ""காரியக்காரி ""
~~~~~~~~
ஆபிரகாம் வேளாங்கண்ணி
(கண்டம்பாக்கத்தான்)