நீதி தவறிய கொலைத் தீர்ப்பு

கொழும்பில் கோட்டையில் இருந்து தெற்கில், காலி வீதியில், எழு மைல் தூரத்தில் உள்ள கடலோர நகரம் தெஹிவல . தமிழர்கள் அதிகமாக வாழும் வெள்ளவத்தைக்கு தேற்கே அடுத்துள்ளது மிருக காட்சி சாலை உள்ள இந்த நகரம், ஒரு காலத்தில் இந்த பகுதி தேசிக்கிகாய் மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் அப் பெயர் அவ்விடத்துக்கு வந்தது என்பர். சிங்களத்தில் "தெஹி" என்பது தேசிக்காயை குறிக்கும் . ஒரு காலத்தில் கோட்டை இராச்சியத்தின் மன்னனின் அரச மாளிகைக்கு இந்த பகுதியில் இருந்து சமையலுக்கு தேசிக்காய் சென்றதாக கதை உண்டு.

இந்த நகரத்தில் உள்ள மிருக காட்சி சாலைக்கு அருகே அமைந்த குவாரி வீதியில் உள்ள 143 ஆம் இலக்க வீட்டில், ஜோசப் டி க்ரூஸ், மேரியன் டி க்ரூஸ் என்ற போர்த்துகேயர் ஒல்லாந்தர் இனங்கள் கலந்த இலங்கை பறங்கியர் குடும்பம் வாழ்ந்து வந்தது. ஜோசப் மத்திய வங்கியில் லிகிதராக பல வருடங்கள் வேலைசெய்து வந்தார் . அவருக்கு கிடைத்த சம்பளம் அவருக்கு குடும்ப நடத்த போதுமானதாக இருந்தது. ஜோசப் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி எல்லா குடும்பங்களிலும் நடப்பது போல் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் இருந்தாலும் பின் சமாதானமாகி வாழ்ந்து வந்தனர் ஜோசப் தம்பதிகளுக்கு 1945 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி போலின் டி க்ரூஸ் (Pauline de Croos) என்ற பெண் குழந்தை பிறந்தது.

போலினுக்கு தன் பெற்றோரோடு பிரச்சனைகள் இருக்கவில்லை. அவளை சுதந்திரமாக வாழ பெற்றோர் விட்டனர். இந்த கத்தோலிக்க குடும்பம் கொழும்புக்கு அருகே உள்ள பல ஊர்களில் வாழ்ந்து இறுதியில் தெஹிவலவில் வாழந்தனர் .

போலின் ஒரு கதோலிக்க பாடசாலையில் கல்வி பயின்றாள். பத்தாம் வகுப்பு சித்தி பெறும் அளவுக்கு அவள் கேட்டிக்காரி இல்லை. ஒன்பதாம் வகுப்போடு பாடசாலைக்குப் போவதை நிறுத்திய பின் , வெள்ளவத்தையில் உள்ள பொலிடெக்னிக் கல்லூரியில் சுருக்கெழுத்து படித்து வந்தாள் .

அவளை அழகி என்று சொல்ல முடியாது. நிறமும் உயரமும் குறைந்தவள் ஆனால் பிறர் தன்னைக் கவரும் விதத்தில் தினமும் புதுப் புது ஆடைகள் அணிவாள். அதற்கு அவளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது புரியாத புதிர் . பல ஆண்கள் அவளிடம் எதோ ஒரு கவர்ச்சியைக் கண்டு தாமாகவே சென்று தம்மை அறிமுகப் படுத்தி நண்பர்களாவார்கள். அவர்களை சொற்ப நேரம் சந்தோசமாக அவள் வைத்திருந்ததுக்கு அவர்கள் கொடுக்கும் வெகுமதி பணமாகவோ அல்லது பரிசு பொருட்களாக இருக்கலாம் . அவர்களில் முக்கியமாக பொலீஸ், மது விலக்கு இலாக்கா, ஆர்மியில் வேலை செய்பவர்களும், வியாபாரிகள், விவாகரத்து செய்தவர்கள், குடும்பத்தில் மனைவியோடு தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள் மற்றும் யூனிபோர்ம் அணிந்த அரச ஊழியர்கள் பலர் அவளின் நண்பர்களானார்கள். அவர்களோடு பார்டிகளில் இரவு வெகுநேரம் நடனமாடி மது அருந்துவாள். பெற்றோர்களும் அவளை கட்டுபடுதுவதில்லை. இவளின் வீட்டுக்கு பலர் வந்து போவார்கள். வீட்டு மேல் மாடியில் உள்ள அவளின் அறையில் அவர்கள் சில மணிநேரம் பேசி உறவாடி போவார்கள். அவள் எவரையும் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. திருமணத்தின் மீது அவளுக்கு நம்பிக்கையும் இல்லை. தினமும் சுருக்கு எழுத்தில் டயரி எழுதுவது அவளின் பழக்கம் .

சடுதியாக ஒரு நாள் தான் கற்பிணி என அறிந்து கருவை அழிக்க அவளுக்கு விரும்பமில்லை. பிறந்தது பெண் குழந்தை . அக் குழந்தையின் தந்தை யார் என்று அவளுக்குத் தெரியாது, மூன்று மாதத்தில் குழந்தையை தெஹிவலைக்கு தேற்கே உள்ள மொரட்டுவா என்ற கரை ஓர ஊரில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் நடத்தும் அனாதை பிள்ளைகள் மடத்தில் அவர்களின் பராமரிப்பில் குழந்தையை விட்டுச் சென்றாள் . அதில் இருந்து தெரிகிறது அவளுக்கு பிள்ளை பற்று அதிகம் இல்லை என்று.

ஒரு நாள் ரயலில் பயணம் செய்யும் பொது கண்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹரி என்ற உயர் வகுப்பில் படிக்கும் பறங்கி இன மாணவனை சந்தித்தாள் . அப்பாவியான அவனை அவள் வேறு பார்வையில் பார்த்து அவனின் சினேகிதியாக நடந்தாள். கண்டியில் வாழும் அவனுக்கும் அவளுக்கு இடையே ஆங்கிலத்தில் அடிக்கடி கடிதப் போக்குவரத்து இருந்தது. வார இறுதி நாட்களில் பரிசுகளுடன் போலினை அவன் வந்து சந்தித்து உறவாடிச் செல்வான் . படிப்பு முடிந்து வேலை அவனுக்கு ஒரு தற்காலிக வேலை கிடைத்தது. அவர்களுக்கு இடையே உள்ள நட்பு 1962 முதல் 1963 கால இடைவெளியில் காதலாக மாறியது.

போலின் நர்சாக படித்து வர விரும்பினாள். அவளை ஹரி ஊக்கப்படுத்தினான். தனக்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்தவுடன் அவளை திருமணம் செய்வதாக சொன்னான் . அவனுக்கு அவள் எப்படிப் பட்டவள், அவள் குணம் என்ன என்பது அப்போது தெரிந்து இருக்கவில்லை
****
நுகேகொட நகரைச் சேர்ந்த எலியாஸ் அப்புஹாமி என்ற மீன் விநியோகம் செய்யும் வணிகரின் மகன் டொன் போதிபால கிராம்பகந்த என்பவர். அவரின் தந்தை சேர்த்து வைத்த சொத்துக்கு அவரின் மரணத்தின் பின் சொந்தக்காரர் ஆனார் . இவரும் தந்தையின் மறைவுக்கு பின் மீன் விநியோகம் செய்யும் வணிகரானார் ஜெசிக்கா என்பவரை காதலித்தார். சித்ரா என்ற பெண் குழந்தைக்கு தந்தையான பின் ஜெசிக்காவை திருமணம் செய்தார் அதன் பின் அசோக என்ற பெண் குழந்தையும் கோதபாய என்ற ஆண் குழந்தையும் பிறந்தார்கள் . இக்குடும்பம் மவுண்ட் லவினியாவில் உள்ள இலக்கம் 5, கவ்டானா ப்ராட்வே (Kawdana Broadway) யில் வசித்து வந்தனர் . போதிபாலாவும், ஜெசிக்காவும் ஐக்கிய தேசிய காட்சியின் ஆதரவாளர்கள். பல அரசியல்வாதிகளை அவர்களுக்குத் தொடர்ப்பிண்டு .அவர்களின் ஆதரவோடு ஆரமி. மட்றும் அரச இலாக்காவுக்களுக்கு மீன் விநியோகம் செய்ய கொந்துராத்துகள் போதிபாலா எடுத்தார். அவர் ஒரு சோக்குப் பேர்வழி .

ஒரு நாள் போலினின் பார்வையில் போதிபாலா சிக்குண்டார். போதிபாலா பற்றி அறிந்த பின் அவள் ஹரியை போலின் ஒதுக்கி வைத்து விட்டாள் . போதிபாலாவின் நிதி நிலமை மோசமானதால் அவரின் காசோலைகள் வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வரத்தொடங்கியது . பெரிய பிலிமத் கார் வைத்திருந்தும் கூட அதை திருத்த பணம் இருக்கவில்லை. மிருககாட்சி சாலைக்கு மீன் வினியோகம் செய்யும் ஒப்பந்தமும் முடிந்தது. வேறு வழியில் பணம் சம்பாதிக்க தன் வீட்டில் இளம் காதல் ஜோடிகள் சந்தித்து உறவாடும் இடமாக வாடகைக்கு விடத் தொடங்கினர். அதனால் வருமானம் அவருக்கு வந்தது . அதை அறிந்த ஊர் மக்கள அவர் வீட்டுக்கு கல்லேறியத் தொடங்கினார்கள். வீட்டு சொந்தக்காரி போதிபாலா குடும்பத்தை வீட்டை விட்டு எழும்பும்படி வேண்டினார்.

போதிபாலா போலினின் உறவு ஜெசிக்காவுக்கு தெரியவந்து, வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே ஒரே வாக்குவாதம். ஜெசிக்கா விவாகரத்துவுக்கு தன்னை தயார் செய்யும் நிலைக்கு வந்தது. இந்த சமயம் போதிபாலாவும் ஜெசிக்காவை விவாகரத்து செய்து போலினை திருமணம் செய்யத் திட்டமிட்டார். போதிபால அடிக்கடி பொலினின் வீட்டுக்குச் சென்று, இரவு தங்கி வரத் தொடங்கினார் போலினும் முஸ்லீம் மதத்துக்கு மாறி திருமணமான போதிபாலாவை திருமணம் செய்ய முயற்சி செய்தார். இந்த நிலையில் ஜெசிக்கா தன் மகன் கோத்தாவை தன் கணவனை வேவு பார்க்க தந்தையுடன் அவர் போகும் இடமெல்லாம் அவரைப் பின் தொடரும் படி சொன்னாள். ஆனால் கோதா அவ்வளவுக்கு புத்திசாலியான மகன் இல்லாதபடியால் ஜெசிக்காவின் திட்டம் செயல் படவில்லை .போதிபால போலினின் காதல் விவகாரம் ஜனவரி 1965 முதல் 1966 பிப்ரவரி மகன் கோதா இறக்கும் வரை தொடர்ந்தது
****
1966 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி காலை 6.30 மணியளவில் அல்பர்ட் பெரேரா என்ற பரிசுத்த ரீட்டா தேவலாயத்தில் வேலை செய்பவன் கிணற்றில் தண்ணீர் அள்ளும்போது கோதாவின் உடல் கிணற்றில் மிதப்பதைக் கண்டான். காலை 8 மணிக்கு பொலீசின் உதவியோடு உடல் வெளியே எடுக்கப்பட்டது. போலீஸ் உடலை பிரேத பரிசோதனையை செய்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக அறிவித்தது . அதோடு தற்கொலை எனப் பிரேத பரிசோதனையாளரால் முடிவுசெய்யப் பட்டது. ஒரு சிறுவன் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று பலர் கேட்டனர்
9.30 மணிக்கு பொதிபாலா குடுமபத்துக்கு கோதாவின் மரணம்பற்றி ரோகன் என்பவரால் அறிவிக்கப் பட்டது. அவரின் மகன் கோதவை ஒரு பெண்னுடன் முதல் நாள் தன கண்டதாக ரோகன் பொதிபாலாவுக்கு சொன்னான். அவனையும் அழைத்துக் கொண்டு போலின் வீட்டுக்கு சென்ற போதிபாலா ரோஹனுகு போலினை காட்டி அவளா கோதாவுடன் அவன் கண்ட பெண் என்று கேட்கவில்லை. . ஜெசிக்கா போலினின் மீது தன் மகனைக் கொன்றதாக சந்தேகித்தாள்.
.
முதல் நாள் 7 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு தண்ணீர் அள்ளும் போது அல்பர்ட் பெரேரா அந்த உடலை கிணற்றில் கோதவின் உடலைக் காணவில்லை என போலிசுக்கு வாக்குமூலத்தில் சொன்னான்..

தேஹிவல - மவுண்ட் லவினியா போலீஸ் இந்த சிறுவனின் மரணத்தை பெரிதாக எடுக்கவில்லை. விசாரணை புலன் ஆய்வு துறைக்கு மாற்றப் பட்டது . போதிபாலாவுக்கு அவருடைய மகன் கோதவின் மரணம் பற்றி அறிவிக்கப் பட்டபோது அவர் நடந்த விதம் போலீசுக்கு சந்தேகத்தைக் கொடுத்தது . தன் மகனின் மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என அவர் சொன்னதை அறிந்து போலீஸ் விசாரணையை ஆரம்பித்தது . கோதாவின் மரணம் தற்கோலையா , விபத்தா அல்லது கொலையா என கனடுபிடிக்க போலீஸ் ஆரம்பித்தது.

கோதா உடலை கண்டு பிடித்த முன் தினம் அவன் யாரோடு இருந்தான் என்று தீவிரமாக போலீஸ் விசாரித்த போது, பலர் போலின் காலை பாடசாலையில் இருந்து கோதாவை அணைத்த படி கூட்டி சென்றதாகவும் அதன் பின் கோதா பாடசாலைக்கு திரும்பவில்லை என் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோதாவை ஒரு பெண் பாடசாலையில் இருந்து அழைத்து சென்றதை தான் கண்டதாக ஒரு மாணவன் பொலீசுக்கு சொன்னான். அதோடு போலின் வீட்டின் அருகே வசிப்பவர்கள் காலையில் வழக்கத்துகு மாறாக போலின் கையில் ஒரு பார்சலோடு போவதை சிலர் கண்டதாக சொன்னார்கள். பரிசுத்த ரீட்டா தேவாலயத்தில் 7 ஆம் திகது கால எட்டு மணியில் இருந்து மாலை வரை கோதாவோடு போலினை கண்டதாக சிலர் சொன்னார்கள்.
கோதவின் மரணத்துக்கு பல விளக்கங்கள் கொடுக்கப் பட்டது. முதலாவது கோதா, போலினிடம் இருந்து விடுபட்டு 4 அடி உயரமுள்ள உள்ள கிணற்றுக்குப் போய் கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது தவறி விழுந்திருக்கலாம் அல்லது கிணற்றில் குதித்து தற்கோலை செய்து இருக்காலம் என்பது ஒரு யூகம். . கோதா தற்கொலை செய்ய போதுமான காரணம் இல்லை. தவறி விழுவதேன்றல் நான்கு அடி உயரம் உள்ள கிணற்றி சுற்றி சுவரில் ஏறி இருந்தால் மட்டுமே தவறி விழ முடியும் . இந்த சாத்தியக்கூறு மிகக் குறைவு. அடுத்தது ஒருவர் கோதாவுக்கு மயகlக மருந்து கொடுத்து கோதாவை கிணற்றுக்குள் தள்ளி இருக்கலாம்.. அது இல்லாது இருந்தால் கோதாவின் கூக்குரல் கிணற்றுக்கு அருகில் உள்ள வீடுகளில் உள்ளோருக்கு அந்த சிறுவனின் அபயக் குரல் கேட்டிருக்கும் . அந்த கொலை இரவு நடந்து இருந்திருக்கலாம் அதனால் கோதாவின் குரல் கேட்க வில்லை. ஆகவே அவன் மயக்கத்தில் இருந்திருக்க வேண்டும் . கோதாவை கிணற்றினுள் கொலையாளி தள்ளியதை எவரும் காணவில்லை. . இந்த கொலையை போதிபாலாவின் அரசியல் எதிரிகள், அல்லது வியாபார எதிரிகள், அல்லது குடும்ப எதிரிகள் செய்து இருக்கலாம். சிறுவன் கோதாவின் மெல் காப்புறுதி இருக்கவில்லை. அதனால் கொலைக்கு அது காரணமாக இருக்க முடியாது. ஆகவே போலினை சம்பந்தப் படுத்ததி கோதாவை கொலை செய்திருக்கலாம். போலின் பல ஆண்களுடன் சேர்ந்து விலைமாது போன்று பழகிய தவறுகளும் இருந்திருக்கலாம் , மற்றும் கோதாவுடன் அவளை பலர் பார்த்தும் , காரணம் இன்றி கோதாவுடன் போலினை அன்று பரிசுத்த ரீடா தேவாலயத்தின் வளவில் உள்ள கிணறுக்கு அருகே நின்றதைக் கண்டதும், அதோடு தான் அன்று வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் புத்தகம் வாசித்து கொண்டிருந்தேன் என்றதும், கோதாவின் புத்ககங்களையும் செருப்பையும் மறைக்க முயற்சித்ததும், ஜூரிகளை அவள் மேல் சந்தேகப் பட வைத்து குற்றவாளி என தீர்ப்பு சொல்ல வைத்தது.

மகனை கொலை செய்தது யார், எந்த காரணத்துக்கு என்ற உண்மை போதிபாலாவுக்கு தெரிந்திருக்கலாம். போலின் கோத்தாவை கொலைசெய்ய போதிய காரணம் இல்லை. போதிபாலா குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்ற அவசியமும் போலினுக்கு இல்லை. அவளை அறியாமல் இந்த கொலையில் சம்பந்தப் பட்டிருக்கலாம். சந்தர்ப்ப சூழ் நிலைகளை ஆதாரமாக கொண்டு எழு ஜூரிகளில் ஆறு பேர் அவள் கொலை செய்ததாக தீர்ப்பு அளித்தனர். அதோடு சமூகத்தில் போலினின் நடத்தையும் அவளுக்கு எதிராக இருந்தது.

போலினுக்கு விதித்த மரணதண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தும் அது பயனலில்லாமல் போயிற்று. சமூகத்து தெரியும்படி போலின் வாழ்க்கையில் வழிதவறி நடந்ததால் மரணத்தைத் தழுவ வெண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள் . “100 குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்பளிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதியை குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கக் கூடாது “ என்று பொதுவாக சட்டத்தில் சொல்வார்கள்

இறுதியாக கவர்னர் ஜெனரலிடம் கருணை மனு சமர்பித்த போது சுப்ரீம் கோர்ட்டின் போலின் குற்றவாளி என்ற தீர்ப்பை மாற்றாமல் போலினின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக அவர் மாற்றினர். 14 வருடங்கள் சிறையில் இருந்து 1980 ஆம் ஆண்டு வெளியே வந்தார். அதன் பின் மூன்று வருடங்கள் காலி நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவலாயத்தில் தொண்டு செய்து அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தார் .

கீழே உள்ள இரு கவிதைகளை எழுதியவர் ஒரு சிறுவனை கொலை செய்ததற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு, அதன் பின் இறைவன் புண்ணியத்தால் ஆயுள் தண்டனை பெற்று, 14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து, விடுதலை பெற்று தான் பிறந்த நாட்டை வெறுத்து அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து 73 வயதாகி வாழ்கின்ற பௌலின் டீ குரூஸ்
****
“அவர்கள் சொல்கிறார்கள் காலம் கவலைகளை தீர்க்கும் என்றும்
அதை மறக்க உதவும் என்றும்
அனால் காலம் இதுவரை நீருபித்துள்ளது,
நான் எவ்வளவு மனம் வருந்தினேன் என்று,
கடவுள் எனக்கு தைரியத்தை தந்தார் எனக்கு ஏற்றப்பட்ட அடிகளை எதிர்த்து நிற்க
ஆனால் இன்னும் என் இதயத்தில் வலி இருக்கவே செய்கிறது
பலருக்கு அது எப்பவும் தெரியாது
****
அவர் எழுதிய இன்னொரு கவிதை
நான் வருந்திய நாட்கள் இன்னும் என்னை விட்டு போகவில்லை.
அமைதியாக நான் இருக்கையில் கண்ணீர் ஓடும்.
மாறக்க முடியாத நினைவுகள் என்னைத் தழுவும்.
நான் பிறந்த தேசத்தை விட்டு வெகு தூரத்தில் இருந்தாலும்.
*****

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (22-May-18, 7:23 pm)
பார்வை : 191

மேலே