புதையல் 6

தன் சகோதரன் நிலை கண்டு உடனே அவனை விட்டு செல்லாமல்
தன் சகோதரன் என்ற பாசத்தோடு
அவனுக்கு வேண்டிய முதல் உதவி செய்து அவனுக்கு உணவு கொடுத்து
அவனை பார்த்து கொண்டான்.
தன் அண்ணன் புரிந்து கொண்டான்.தன் காய்ச்சல் வந்த தம்பியோடு அன்று இரவை கழிக்க தொடங்கினார்.
அவர் உதவி செய்ததை ஏற்று தன்
மனம் உருகி மன்னிப்பு கேட்டான்.
என்ன தான் கருத்து வேறுபாடு இருந்தாலும் தன் குடும்பம் தன் சகோதரன் என்றால் விட்டு கொடுக்காமல் கூடாது.இரவை கழிக்க அவர்கள் தங்கள் திருமணம், வாழ்க்கை, தன் பிள்ளை பருவத்தை எண்ணி பல வித உணர்வுகளை
மகிழ்ச்சி களை பகிர்ந்தார்.
அவர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசியது இது தான். முதல் தடவை அவர்கள் இருவரும் தங்கள் கோபங்கள் கவலைகள் தங்களின் பணத்தாசையால் உறவுகளின் அருமை புரியாது வாழ்ந்தனர்.
பணம் தேவை தான் ஆனால் உறவுகள் அதிலும் மேலானது.என தன் தம்பியிடம் சொல்லி தங்கள் உணர்வை பகிர்ந்தார்.
இரவின் பொழுது அழகானது.உறவுகளோடு சென்றது.
தன் அருகே அண்ணன் இருந்ததால் பயம் அறியாது தன் காய்ச்சலும் காணாமல் போனது.
இருவரும் ஒன்றாக பேசி ஒன்றாக சென்று புதையலை தேடலாம் என
முடிவு செய்தனர்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (21-May-18, 2:50 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 71

மேலே