சில நேரங்களில்‌

மருந்துக்கும்
உண்மைக்கும்
ஒரே சுவைதான்...
அது கசப்பு...

நாம்
நினைத்துக் கொள்வதே
உண்மை
என்பது
மனித மனம்.

பார்கவி
நினைத்துக் கொண்டாள்,
அவளை எனக்கு
பிடிக்காதென.

அது தான்
உண்மை
என நம்பினாள்.

பேசவில்லை
என்னிடம்
ஏராள நாட்கள்...

திடீரென
ஒரு நாள்
இனிமே உன்கிட்ட
எப்பவுமே
பேசமாட்டேன், போ...
என்றாள்.

எத்தனையோ
சமாதானம்
சொன்னேன்...

அவள் கேட்கவில்லை.

பேச மாட்டேன்
என்பதை
பேசினாள்..
பேசினாள்...
பேசினாள்...

வெகு திடீரென
அவள்
முகம் நிமிர்த்தி,
சொன்னேன்

ஐ லவ் யூ..

அவள்
கோபப்படவும் இல்லை.
வெட்கப்படவும் இல்லை.

இத சொல்றதுக்கு
இவ்வளோ நாளா...?
என்றாள்....

எனக்கு புரிந்தது,
தேன் மிட்டாய்
மட்டுமல்ல...
சில நேரங்களில்
உண்மையும்
இனிக்கவே செய்கிறது.

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (17-Sep-21, 4:21 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 126

மேலே