கார் நாற்பது - சிறப்புப் பாயிரம் - நேரிசை வெண்பா

கார் நாற்பது - இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங் கூத்தனார். கூத்தனார் என்பது இவரது இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர்மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத்தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார்; பலராமனைப்பற்றியும் நூலுள் கூறியுள்ளார் (19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும்.

கார் நாற்பது
சிறப்புப் பாயிரம்
நேரிசை வெண்பா

முல்லைக் கொடிமகிழ, மொய்குழலார் உள்மகிழ,
மெல்லப் புனல்பொழியும் மின்எழில்கார்; - தொல்லைநூல்
வல்லார் உளம்மகிழ, தீம்தமிழை வார்க்குமே,
சொல்ஆய்ந்த கூத்தர்கார் சூழ்ந்து!

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (5-Aug-25, 7:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே