கவிபாரதீ- கருத்துகள்

படித்ததும் புன்னகை மலர்ந்தது

முற்றிலும் உண்மை என்று அறிவுக்கு தெரிகிறது ஆனால் இந்நிலை மாற வேண்டும் என்று மனம் விரும்புகிறது.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே 🙏.

”உறுதியை உழைப்பில் உறங்கவிடு ”
என்று நான் எழுதியதின் அர்த்தம்,
இலக்கை நிர்ணயித்த பின்னரே அதற்கான உழைப்பை ஆரம்பிப்பது
வழக்கம். அந்த உழைப்பில் உறுதி குறைபாடு இருப்பின் அது இலக்கை சென்று அடையாது. ஆகையால்தான் உறுதியை உழைப்பில் நிரந்தரமாக உறங்கவிட்டால் அதாவது தங்கவிட்டால்
அந்த உழைப்பானது இலக்கை அடைந்த பின்னரே இளைப்பாறும்.

நீங்கள் கூறிய
”உறுதியை உழைப்பில் உரமிடு”
என்பதற்கு பதில்
உறுதியை உழைப்பி(ற்கு) உரமிடு
என்றால் மிகப்பொருந்தும் என்பது என்
தாழ்மையான கருத்து.

இதயம் வலிக்கிறது¡¡¡

நீங்கள் சொன்ன கதை மிகச் சிறப்பு¡¡¡

இவை மட்டும்தான் இவ்வகிலத்தில் பொதுவுடைமை, வேறொன்றும் இல்லை.

இப்புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் சிந்தையில் தோன்றும் கவிதை?

அருமை!
பிறந்தகம் சென்ற மனைவியின், அனைத்து
கணவன்களின் தவிப்பும் தெள்ளத்தெளிவாக
கண் முன் நிழலாடுகிறது.

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.
இனிமேல் கருத்தில் கொள்வேன்.

நான் இது போல் சில கவிதைகள் வாசித்துள்ளேன் ஆகையால் முயற்சித்தேன்.

கற்றுக்கொள்ளும் ஆவலில் ஒரு கேள்வி, தவறாக என்ன வில்லை எனில் பதில் அளிக்கவும்.

இந்த கவிதை எழுதி இருக்கும் முறை தவறா? அல்லது நன்றாக இல்லையா?


கவிபாரதீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே