பனிவிழும் மலர்வனம்
தூரிடும் பனித்துகள்களில்
தென்றலாய் நீமிதந்துவர
சிலிர்த்தது யென்தேகம்....
சிலிர்ப்பை தனித்திட
இதழ்வழி வெட்பம்வேண்டி
தவித்தது இதயம்.....
பெண்மை போற்றும்
இயற்குணம் தடுத்தது
தன்னிச்சையாய் யெனை......
தன்னிலை மறந்த
எந்தன்மதி, மதித்ததுனை
மலர்வன மலராக.....
இயற்மலர்களோ தனையே
மாய்த்தது, உன்னிடத்தில்
தோற்று கர்வமடிந்ததில்....
சூழல் அறியாத நீயோ
பனிவிழும் மலர்வனத்தின்
பரவசமான பார்வையாளராக.....
கவிபாரதீ ✍️

