மலரத்துடிக்கும் மனம்
மலரத் துடிக்கும்
மங்கை, மனம்மருகி
மன்னவன் வருகைக்காக....
அகத்தினை விடுத்து
புறத்தில் புதையலை
தேடும் புல்லுறுவிகள்....
புன்பட்ட மனதோடு
புலராத பொழுதினில்
விடியலை எதிர்நோக்கி....
அவள் காத்திருந்தாள்,
அவள் காத்திருகின்றாள்,
காத்துக் கொண்டிருப்பாளா?
பண்படுத்தி மனதினை
பதறாமல் காத்திருப்போம்
பதில் சொல்லும் காலம்!!!
கவிபாரதீ ✍️

