காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 5

5 . காதலில் கரைந்த நொடிகள்


திலோத்தமா பைக்கில் இருபுறமும் கால்களை வைத்தபடி ஏறி அமர்ந்து அவன் தோள்களை பற்றிக் கொண்டாள்.

மெதுவாக பைக் கிளம்பியது. திலோ வெகு மகிழ்ச்சியாக உணர்ந்தாள். இயல்பாகவே திலோவுக்கு பைக் இல் செல்வது மிகவும் விருப்பமான ஒன்று அதுவும் மனம் கவர்ந்த நாயகனுடன் செல்லும்போது கசக்குமா என்ன என்று மனதில் நினைத்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.

இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட்டினால் சூப்பரா இருக்கும் ரகு என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டு உதடுகள் பிரியாது புன்னகைத்தான் ரகுராமன். இன்று திலோ மிகவும் ஆனந்தமாக இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டான்.

இல்லையெனில் எப்பொழுதும் வேகமாக பைக்கை செலுத்தினால் திட்டும் திலோ இன்று அவளே வேகமாக ஓட்டும் படி கூறுவது என்றால் வேறு என்ன எண்ணுவது.

காரில் வந்து செல்லும் வசதி இருந்தும் அவன் பைக்கில் செல்வதே, வேகமாக பைக்கை ஓட்டும் போது எதிரில் இருந்து முகத்தில் மோதும் காற்றை நன்றாக மூச்சை இழுத்து வெளியே விடும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது.

இந்த சுகத்தை அனுபவிக்க வென்றே பைக்கில் செல்வது அவன் வழக்கம்.

வேகமாக ஓட்டுவது தான் அவனுக்கும் மிகவும் பிடித்தமானது. திலோவிற்கு பயந்து தான் மெதுவாக உருட்டிக் கொண்டு இருந்தான்.

தேவதையே வரம் கொடுத்த பிறகு வேறு என்ன தடை என்று நினைத்தபடி வேகத்தை விர்ரென்று கூட்டினான்.

மனதில் இருந்த மகிழ்ச்சிக்கு இணையாக காற்று சுழன்று அடிக்க அவள் கருமையான கூந்தலும் அதற்கு சமமாக காற்றில் அலை பாய்ந்தது.

இது வரை முற்றிலும் அனுபவிக்காத சுகம் தரும் இந்நிலை திலோத்தமாவுக்கு மனதின் இனிமையை மேலும் கூட்டியது.

இந்த நாள் தான் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனந்தம் தலைக்கு ஏற அவள் கரங்கள் அவன் தோளில் இருந்து மெதுவாக இறங்கி அவன் இடுப்பை வளைத்தது. அவள் அறியாமலே அவன் முதுகில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். ஓர் அறை புன்னகை இதழ்களில் தேங்கி நிற்க இதமாய் சாய்ந்து இருந்தாள் திலோத்தமா.

ரகுராமன் புரிந்து கொண்டான், அவனுடைய அன்பு தேவதை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருகின்றாள். இல்லையெனில், இவனுடன் நடந்து செல்லும்போது கூட இரண்டு அடி தள்ளியே நடக்கும் இயல்பு உடையவள் இன்று தானாகவே இவன் மீது சாய்ந்து கொண்டு இருப்பது இவனுக்கும் மிகவும் பிடித்து இருந்தது.

கிடைக்காத அறிய தருணத்தை மனதார அனுபவித்தான். அவளின் இதயம் துடிப்பதை இவன் தேகத்தில் உணர்ந்தது புது அனுபவமாக இருந்தது, கண் மூடி ரசித்தான்.

ஈ சி ஆர் ரோட்டில் ஓடிக்கொண்டு இருக்கும் வாகனம் அனைத்தும் மறைந்து இவர்கள் மட்டும் தேவலோகத்தில் பயணிப்பது போல் இருந்தது இருவருக்கும்.

டமார்...... என்ற உச்சமான காதை பிளக்கும் படியான சத்தம் கேட்டு திகைத்து சடன் பிரேக் போட்டான் ரகுராமன்.

பிரேக் போட்டு பைக் குலுங்கி நின்ற வேகத்தில் தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தாள் திலோத்தமா.தொடரும்....

எழுதியவர் : கவிபாரதீ (23-May-23, 7:26 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 54

சிறந்த கவிதைகள்

மேலே