பகு - நகு
நண்பா, நாம இரண்டு பேரும் பள்ளி, கல்லூரியில் வகுப்புத் தோழர்கள். ஒரே நாளில் உனக்கு திருச்சியில் திருமணம் நடந்தது. எனக்கு புதுக்கோட்டையில். போன் வாரம் உன் மனைவிக்கும் ஆண் குழந்தை. என் மனைவிக்கும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகளுக்கு பேரு வைக்கணும். அதைப் பத்திக் கொஞ்சம் சிந்திப்போமா?
@@@@@@@@
நண்பா நாம இரண்டு பேரும் மென்பொருள் துறையில் வேலைல இருக்கிறோம். நம்ம பெற்றோர்கள் படிக்காதவங்க. காலப்போக்கில் புரிஞ்சுக்க ஆம் நமக்கு தமிழ்ப் பேருங்கள வச்சுட்டாங்க. நம்ம கூட வேலை பார்க்கிற அத்தனை பேருங்களும் இந்திப் பேருங்க. நம்ம பேரைச் சொல்லி யாராவது கூப்பிட்டா எல்லாரும் நம்மள ஒரு மாதிரி பார்க்கிறாங்க. வருங்காலத்தில் நம்மை பிள்ளைகளுக்கு இந்த நிலைமை வரக்கூடாது.
@@@@@@@
நீ சொல்றதும் சரிதான்டா நண்பா. சுருக்கமான இந்திப் பேரை நம்ம பிள்ளைகளுக்கு வச்சுட்டோம். என்ன சொல்லுற?
@@@@
சரிடா. எம் பையன் பேரு 'பகு'
அதே மாதிரி பேரை உம் பையனுக்கு வைடா பார்க்கலாம்.
@@@@@
உம் பையன் 'பகு'. முதல் எழுத்து மாத்தினா எம் பையன் பேரு.
@@@@@@
சொல்லுடா சீக்கிரம்.
@@@@@@
'நகு'.
@@@@@@@
'பகு' 'நகு'. பெயர் பொருத்தம் அருமைடா.
########################
Bahu = Flower name. African, Indian, Sanskrit origin. Unisex name.
Nahu = Lord Krishna. Indonesian, Indian origin. Unisex

