ஆசையில் ஓர் கடிதம்

சிறகடித்து பறக்கும் வயதில்
செல்லமாய் ஓர் வார்த்தை
செவி வந்து சேர்ந்தாலும்
மனம் மயங்கி மகிழும்....

பதின் வயதில் பள்ளியில்
சிதறிய கவனம் குவிந்தது
பள்ளித் தோழன் மீது,
ஆசை மிக வரைந்தேன்
ஒர் கடிதம்....

தூரிகை கொண்டு தூரலாய்
வண்ணம் தூவி தீட்டினேன்,
ஆடவன் கைபற்றிய காரிகையும்
இடையினில் இருவரின் துடிக்கும்
இதயம் ....

என் மன வானின்
எண்ணங்களை துரிதமாக
தூவினேன் தூரிகை கொண்டு
ஓவிய காரிகையினுள்...

பின் குறிப்பினில், "யென்னிதயச் சொற்களை அறிந்திட யெனை
ஊன்றி கவனித்தால் மட்டுமே
விழிகளுக்கு தென்படும்".....

இதயத்துடிப்பு மிக கடிதம்
கை மாறியது என்னவனிடம் ,
மனம் கவர்ந்தவன் மனதறிய
கலங்கிக் காத்திருந்தேன்....

கடிதமும் வந்தது, நான்
வரைந்த மடல் மீண்டும்
என்னிடமே, யென் இதயத்
துடிப்பு கரை கடந்தது....

மனம் துவண்டிட விழி
துளிர்க்க கடிதம் நோக்கினேன்,
மற்றும் ஓர் பின்குறிப்பு
உற்று நோக்க என்னவனின்
கையொப்பம்.....

துவண்ட மனம் துடித்து
நிமிர்ந்தது, அகத்தின் அழகு
முகத்தில் பிரதிபலிக்க முறுவலுடன்
வாசித்தேன் என்னவன் குறிப்பினை....

அதில்,

"யென் னிதயச் சொற்களை
அறிந்திட யெனை ஊன்றி
கவனித்தால் விழிகளுக்கு
தென்படும்....



கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (26-Jul-23, 5:54 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 368

மேலே