மனமலர்ச்சி

நித்தம் என் முகத்தில்
புத்தம் புதிதாக "மலர்ச்சி"
மலர்ந்து விகசிக்கின்றது...!!!

என் கற்பனை வானில்
எழும் சீரிய சிந்தைதனை
கவிதையாய் பிரசவிக்கும்போது...!!!

முத்தம் ஒன்று தந்தெனது
மலர்ச்சி கொண்டாட படும்
பிரசவித்த கவிதைக்கு பிரசுரிக்குமுன்...!!!

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (19-Jul-23, 4:01 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 130

மேலே