அருந்ததி வருகிறாள்
தெற்றுப்பல் தெரிய
தெவிட்டாத மொழியில்
தென்றலாய் வருடிடும்
தேவதை வருகிறாள்....
மாந்தழிர் மேனியுடன்
மாமன் மனதை
மதிமயங்க வைத்த
மங்கை வருகிறாள்....
செல்லும் இடமெல்லாம்
மகிழ்வை இனிதே
விரவிச் செல்லும்
ஏந்திழை வருகிறாள்.....
என்னுள் நிழலாடும்
நிர்மலமான நினைவில்
நீங்காது வேர்பிடித்த
ஆலம் வருகிறாள்.....
அறுதியிட்டு உரைப்பேன்
என்னுள் அமிழ்ந்து
யெனை ஆட்கொண்ட
அருந்ததி வருகிறாள்....
கவிபாரதீ ✍️