பசுமை நினைவு
மாமனிடம் மல்லுகட்டி பயணித்த
மாட்டுவண்டி பயணம் பசுமை
மாறாதென் மனமேடையில் இன்றும்....
வண்டிப் பயணம் அல்லாது
வம்படியாக மாமனை துரத்திய
வரப்பு வாய்க்கால் அனைத்தும்......
களத்து மேட்டில் கலகலத்தவாறு
கருத்தாய் சேகரித்த நெல்லுமணியும்
கரும்பு தோட்டத்தின் திருட்டும்.....
பள்ளிக்கு செல்லும் வழியெல்லாம்
பட்டம் விட்டுச்சென்று மாட்டும்போது
பல்லிலிக்கும் பால்வடியும் முகமும்.....
குறும்பு கொப்புளிக்கும் உருவமும்
குதூகலம் மட்டுமறிந்த பருவமும்
குற்றம் அறியாத இதயமும்
வண்ண வண்ண உடைகளில்
வண்ணத்துப் பூச்சியாய் பறந்து
வளவளத்த சின்னஞ்சிறு உலகம்
நினைவு வானில் நிறைவாய்
பதிந்த பழைய ஞாபகங்கள்
பசுமை மாறாமல் இன்றும்.......
கவிபாரதீ ✍️