தனிமைப் பொழுது

சில தனிமை பொழுதுகளை கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல...
ஆம், அது சுயமானதாக அல்லாது
நம் சிநேகத்திற்கு உரியவர்களால் வழங்கப்படுகின்றபோது...
ஒற்றை கோப்பையில் தேனீருடன், இத்தனிமையை சற்று கூடுதலாக நிறப்பிடும்போதும்,
பிடித்தமான சில பாடல் வரிகள் செவிக்கு மட்டும் எட்டி சிந்தையில் ஒட்டாமல் ஓடிடும் போதும்,
சிலர் அள்ளிக்கொண்டுவந்த அலுத்துப்போன ஆறுதல் வார்தைகளை கேட்க துணிவின்றி கதவடைத்து, நமக்கு நாமாகவே
ஓர் சிறை எழுப்பும்போதும்,
இன்னும் இன்னும் பலவகையில்
இத்தனிமை நம்மை சில நினைவுகளால் நெருக்கிடும்போதும்
அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை,
இத்தகைய தனிமைப்பொழுதுகள்...

எழுதியவர் : சிவரஞ்சனி பிரசாந்த் (29-Aug-18, 1:19 am)
பார்வை : 517

மேலே