என் காதல்

உன்னை பாருக்கும் முன்

கர்ப்பிணி
தாயின் பிரசவ
வலியையை அறியாத
குழந்தையாய் என் காதல் !!

செடியில் பூத்த
பூவின் வாழ்நாள்
அறியாத
கிளையாய் என் காதல் !!

அறுவடை நாள்
அறியாது தலை சாய்த்து
வணங்கும்
நெற்பயிராய் என் காதல் !!

எங்கே வளைவு
வரும் என்று
அறியாது பாயும்
நீரோடையாய் என் காதல் !!

எதிர் வரும்
எதிர்காலத்தை
அறியாத
பேதையாய் நான் !!

எழுதியவர் : யாதிதா (15-Sep-14, 1:43 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 225

மேலே