பத்மா பாண்டி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பத்மா பாண்டி
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  28-Jul-1977
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Mar-2020
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  2

என் படைப்புகள்
பத்மா பாண்டி செய்திகள்
பத்மா பாண்டி - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2015 10:43 am

ஓம்பும் உயர்ந்தோர் உரைத்திடும் நல்மொழி ஊக்கந்தரும்
தேம்பல் விடுத்துநீ தேறிட தைரியம் சேர்ந்துவரும்
சூம்பிக் குமைவதில் சோர்வு மிகுந்திடும் சுந்தரனே
சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே !


( இலந்தையார் தந்த ஈற்றடிக்கு எழுதிய கட்டளைக் கலித்துறை )-

மேலும்

தாங்கள் தமிழாசிரியரோ! 12-Dec-2024 3:14 pm
வழிநடத்தும் வாழ்க்கை வரிகள்.. அருமை.. இதயம் நிறைந்த அன்பின் வாழ்த்து.. 13-Mar-2020 11:37 pm
மிக்க நன்றி ஐயா ! 01-Mar-2020 11:22 pm
அருமையான கட்டளைக் கலித்துறை! ஆச்சர்யம்! பார்த்த 54 பேரில் யாரும் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை! பெரும்பாலோர் வாசிப்பதோடு சரி. 11-Dec-2019 10:36 pm
பத்மா பாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2020 9:51 pm

கந்தன்

கந்தா நீ யாரடா – கண்
காணா காட்சிக் கருணையா !
சொந்தம் என்று கொள்ளவா – உனை
சொர்க்கம் வந்து காணவா !

வேல் கொண்ட வேந்தனே – உன்
மேல் எனக்குக் கோபமே !
செல்லப் பிள்ளைதானே நீ – தாய்
ஏக்கம் தீர்க்க வாராதேன் !

பிஞ்சு முகம் காட்டாது – நான்
பிழை ஏதும் செய்தேனோ !
தஞ்சம் என வீழ்ந்தேனே – உன்
தாமரைப் பொற் பாதங்களில் !

மேலும்

பத்மா பாண்டி - சிவரஞ்சனி பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2018 1:19 am

சில தனிமை பொழுதுகளை கடப்பதென்பது அத்தனை சுலபமல்ல...
ஆம், அது சுயமானதாக அல்லாது
நம் சிநேகத்திற்கு உரியவர்களால் வழங்கப்படுகின்றபோது...
ஒற்றை கோப்பையில் தேனீருடன், இத்தனிமையை சற்று கூடுதலாக நிறப்பிடும்போதும்,
பிடித்தமான சில பாடல் வரிகள் செவிக்கு மட்டும் எட்டி சிந்தையில் ஒட்டாமல் ஓடிடும் போதும்,
சிலர் அள்ளிக்கொண்டுவந்த அலுத்துப்போன ஆறுதல் வார்தைகளை கேட்க துணிவின்றி கதவடைத்து, நமக்கு நாமாகவே
ஓர் சிறை எழுப்பும்போதும்,
இன்னும் இன்னும் பலவகையில்
இத்தனிமை நம்மை சில நினைவுகளால் நெருக்கிடும்போதும்
அத்தனை சுலபமானதாக இருப்பதில்லை,
இத்தகைய தனிமைப்பொழுதுகள்...

மேலும்

நீ யாரென்று தெரிய வேண்டும் என்றால் தனிமையை நீ உணர வேண்டும்... தனிமை என்னைக்குமே சுகந்தாங்க... 08-Sep-2020 9:58 am
தனிமை சில நேரங்களில் இனிமை...! தனிமை சில நேரங்களில் கொடுமை. ..! 30-Jun-2020 10:34 pm
உண்மை 04-Apr-2020 8:58 pm
உண்மைதான் நட்பே.... ஆனால் கவி உரைநடை வடிவில் இல்லாமல் இருந்திருக்கலாம்..... 30-Aug-2018 11:49 am

தேவைப்படும்போது இயற்கையே தன்னை சலவை செய்து கொள்ளும்.

மேலும்

பத்மா பாண்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2020 8:30 pm

சீற்றம்

மனிதா,
அறிவின் உச்சமே
அடைப்பட்டுப் போனாயே.
மனிதா,
ஆணவப் பொம்மையே
அடங்கிப் போனாயே.

மனிதா,
வலிக்கிறதா ?
வருத்தப்படு.
மனிதா,
குழப்பமா ?
கலிகாலமடா !


மனிதா,
பதறாதே
உன் பாவம் கரையட்டும்
மனிதா,
பலித்தது போதும்
பயந்து நட.


மனிதா,
தொலைத்தாய் மனிதம்
தொடர்வது சாபம்.
மனிதா,
இனியும் திமிராதே
இனி இல்லை வாய்ப்பு.

மனிதா,
உனக்கு கொரோனோ
ஒரு கிருமி
மனிதா,
எனக்கு நீ
மட்டும்தான் கிருமி.

மனிதா,
நான் உனக்கானவன்
நீ எனக்கானவனா ?
மனிதா,
சொல்லிவிடு,
இனிமேல்தான் தீர்ப்பு.

மனிதா,
எனது பொருமை
உனது வாழ்வு.
மனிதா,
எனது சீற்றம்
உனது அழிவு.

மனிதா,
இதுதான

மேலும்

சீற்றத்தின் வெப்பம் தருகிறது வேதனை .... என் செய்வது நாம் பழிக்காரர்கள் 28-Mar-2020 8:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே