சீற்றம் கவிதை
சீற்றம்
மனிதா,
அறிவின் உச்சமே
அடைப்பட்டுப் போனாயே.
மனிதா,
ஆணவப் பொம்மையே
அடங்கிப் போனாயே.
மனிதா,
வலிக்கிறதா ?
வருத்தப்படு.
மனிதா,
குழப்பமா ?
கலிகாலமடா !
மனிதா,
பதறாதே
உன் பாவம் கரையட்டும்
மனிதா,
பலித்தது போதும்
பயந்து நட.
மனிதா,
தொலைத்தாய் மனிதம்
தொடர்வது சாபம்.
மனிதா,
இனியும் திமிராதே
இனி இல்லை வாய்ப்பு.
மனிதா,
உனக்கு கொரோனோ
ஒரு கிருமி
மனிதா,
எனக்கு நீ
மட்டும்தான் கிருமி.
மனிதா,
நான் உனக்கானவன்
நீ எனக்கானவனா ?
மனிதா,
சொல்லிவிடு,
இனிமேல்தான் தீர்ப்பு.
மனிதா,
எனது பொருமை
உனது வாழ்வு.
மனிதா,
எனது சீற்றம்
உனது அழிவு.
மனிதா,
இதுதான் நீ
இதுவரைதான் நீ.
மனிதா,
இதுதான் நான்
எதுவரையும் நான்.
கண்டுபிடி நான் யார்.
கண்டுகொண்டாயா நீ யார் ?
மனிதா,
விழித்திடு
பூமி என்னது.
இப்படிக்கு,
இயற்கை