கந்தன்
கந்தன்
கந்தா நீ யாரடா – கண்
காணா காட்சிக் கருணையா !
சொந்தம் என்று கொள்ளவா – உனை
சொர்க்கம் வந்து காணவா !
வேல் கொண்ட வேந்தனே – உன்
மேல் எனக்குக் கோபமே !
செல்லப் பிள்ளைதானே நீ – தாய்
ஏக்கம் தீர்க்க வாராதேன் !
பிஞ்சு முகம் காட்டாது – நான்
பிழை ஏதும் செய்தேனோ !
தஞ்சம் என வீழ்ந்தேனே – உன்
தாமரைப் பொற் பாதங்களில் !