நான் கண்டிராத சுவாரசியம் நீ

உன்னைக் கண்ட அந்த நொடி
எனையே நான் கண்ட நொடி !!

என்னோடு நீ பேசுகையில்
எழில் கொஞ்சும் பேச்சால்
எனை மறந்து நிற்கிறேன் !!

உன் கைக்கோர்த்து நடக்கையில்
விண்ணவனோடு நான் என
வியந்து தான் போகிறேன் !!

உன் மார்பில் சாயும் போது
மேக தேகத்தின் ஓரத்தில்
நிலவாய் நான் !!

இத்தனையும் உன்னால் தோன்றியதானால்
இதுவரை நான் கண்டிராத
சுவாரசியம் நீ !!

எழுதியவர் : யாதிதா (11-Sep-14, 11:58 am)
பார்வை : 267

மேலே